/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/352_7.jpg)
வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்து பலியான சுபஸ்ரீயின் பெற்றோர், இன்று (24-9-2020), சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சட்டரீதியாக இந்த பிரச்சனையை வெளிக்கொண்டு வந்து துணை நின்றதற்கு நன்றி தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு 12.9.19 அன்று வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க.வினர் திருமண வரவேற்பு நிகழ்வுக்காக சாலையின் நடுவே வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் சுபஸ்ரீ பலியானார். இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, தி.மு.க. சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சுபஸ்ரீயின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, காவல்துறை மீது சட்டத்தை முறையாக செயல்படுத்தாதது தொடர்பாகவும், நிவாரணம் வழங்க கோரியும் வழக்குதொடர்ந்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்வு எட்டப்பட்டு 20 லட்ச ரூபாய் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சுபஸ்ரீ மரணத்தை தமிழகம் முழுவதும் வெளிக்கொண்டு வந்து - சட்டரீதியாகதுணை நின்றதற்கு, சுபஸ்ரீயின் பெற்றோர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்தசந்திப்பின்போது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உடனிருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)