Skip to main content

ராகுல்காந்தி உறுதியாக உள்ளார்: திருநாவுக்கரசர் பேட்டி

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சு.திருநாவுக்கரசர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியளார்களை சந்தித்தார்.
 

அப்போது, தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை பேரிடர் பாதிப்பாக கருதி மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். தமிழக அரசு கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பதை அறிந்து முன்கூட்டியே நிதி ஒதுக்கி மாற்று ஏற்பாடு செய்திருக்க வேண்டும். முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் ஓரளவு சமாளித்து இருக்கலாம்.


  su thirunavukkarasar


 

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல்காந்தி உறுதியாக இருக்கிறார். ஆனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர் கள் அவர் தலைவராக நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதை தொடர்ந்து வற்புறுத்துவோம்.
 

2 முறை வெற்றி பெற்றாலே இந்தியாவை மோடிக்கு மக்கள் எழுதி தந்துவிட்டதாக கூற முடியாது. 3 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான். 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. 


 

நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக பேசக்கூடிய பலமான தலைவர் ராகுல்காந்தி தான்.  மக்கள் விரும்புகின்ற கட்சிக்கு தகுதியான தலைவர் ராகுல்காந்தி தான். தமிழகத்தில் தலைவர்களுக்கு பஞ்சம் என்றால் வேறு மாநிலத்தில் இருந்து தலைவர்களை இறக்குமதி செய்ய முடியுமா?. இவ்வாறு தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

5-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் பாடத்திட்டத்தை நிறுத்த வேண்டும்: சு.திருநாவுக்கரசர்!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020
Su. Thirunavukkarasar


5-ஆம் வகுப்பு வரை குழந்தைகளுக்கான ஆன்லைனில் பாடம் நடத்தும் திட்டத்தை மற்ற சில மாநிலங்களைப் போல நிறுத்த வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான சு.திருநாவுக்கரசர்.
 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா பாதிப்பாலும் பிரச்சனையாலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் ஆன்லைன் மூலம் சிறு குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவது சரியல்ல, அவசியமும் இல்லை என பொதுவாக பலராலும் கருதப்படுகிறது. இது சுமார் இரண்டரை மணி நேரம் வீட்டில் உள்ள குழந்தைகளின் கண்களுக்குக் கேட்டினையும், மனதிற்கு உளச்சலையும் தரக் கூடியது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இது சங்கடத்தையும், சிரமத்தையும் மன உளைச்சலையும் தரக் கூடியது.

எல்லா வீடுகளிலும் இணையத்தள வசதியோ, கணினியோ, மடி கணினியோ, தொடுதிரை கைப்பேசியோ இருப்பதில்லை. மேற்கண்ட வசதிகள் உள்ள குடும்பங்களில் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்குச் சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுக்கு வசதியான நேரத்தில் குழந்தைகள் விரும்பும் வகையில் பாடங்களைச் சொல்லித்தர இயலும்.  
 


சரியான கல்வியாளர்களின் ஆய்விற்குப் பிறகே கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் குழந்தைகளுக்கான ஆன்லைன் பாட முறை கைவிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் தவிர தனியார்ப் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் சொல்லித் தருவதைக் காரணம் காட்டி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைக் கேட்டு பெற்றோர்களின் சிரமமான இச்சூழ்நிலையில் வற்புறுத்துவதாகப் பரவலாகச் சொல்லப்படுகிறது.

எனவே 5-ஆம் வகுப்பு வரை குழந்தைகளுக்கான ஆன்லைனில் பாடம் நடத்தும் திட்டத்தை மற்ற சில மாநிலங்களைப் போல நிறுத்திட வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து முதலமைச்சரும், கல்வி அமைச்சரும், கல்வித் துறை அதிகாரிகளும், கல்வியாளர்கள், நிபுனர்கள், மனோதத்துவ விற்பன்னர்கள் ஆகியோரை அழைத்து, அவர்களின் கருத்தறிந்து மேற்கண்ட எனது வேண்டுகோளை அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

Next Story

கரோனா: திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம்

Published on 12/05/2020 | Edited on 12/05/2020
corona virus issue - su thirunavukkarasar - Consulting with the Collector

 


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவில் உள்ள அரசு அலுவலர்களோடு கரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நோய் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஏழை - எளிய நடுத்தர மக்களுக்கான உதவிகள் அவர்களது சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் சு.திருநாவுக்கரசர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (12.5.20)  மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.