Skip to main content

“இறுதி மூச்சு வரை போராட்டம்” - கலைஞர் நூற்றாண்டு விழாவில் வைகோ புகழாரம்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

“Struggle to the Last Breath” - Vigo Tribute at the Centenary of kalaignar

 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்களும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர். 

 

இவ்விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தந்தை பெரியார் தன் வாழ்நாளில் எத்தனையோ விழாக்களை எடுத்திருந்தாலும் 1948 ஆம் ஆண்டில் அவர் திருக்குறளுக்கு விழா எடுத்தார். அந்த விழாவில் பட்டுக்கோட்டை அழகிரிசாமியைக் கொண்டு தாளமுத்து நடராசனின் சிலையைத் திறக்க வைத்தார். அவர் 49ல் திருக்குறள் மாநாட்டை நடத்தினார். 

 

இவை எல்லாம் தன் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்ட நிலையில், கலைஞர் தன் 16 வயதில் இந்தி எதிர்ப்பு போர்க்களத்தில் நுழைந்த நாள் முதல் எண்ணற்ற போர்க் களங்களை நடத்தியவர். அது கல்லக்குடி போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம், நெருக்கடி நிலை போராட்டம் என தனது இறுதி மூச்சு வரை போராட்டம் நடத்தியவருக்கு நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் உரையாற்றும் சந்தர்ப்பத்தினை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி” எனக் கூறினார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

வீரபாண்டிய கட்டபொம்மனின் 224 வது நினைவு புகழ் அஞ்சலி விழா (படங்கள்)

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

சுதந்திர போராட்ட வீரரும் பாஞ்சாலங்குறிச்சி மன்னருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 224 வது நினைவு புகழ் அஞ்சலி விழா, திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், ம.தி.மு.க தலைவர் வைகோ கலந்து கொண்டார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'கலைஞரின் இதயத்தில் எனக்கு என்றும் தனி இடம் இருந்தது' - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 'I had a special place in the artist's heart'-Rajinikanth Essay

 

கலைஞர் நூற்றாண்டை ஒட்டி 'தமிழ் திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்' என்ற தலைப்பில் ரஜினிகாந்த் கட்டுரை எழுதியுள்ளார்.

 

அந்த கட்டுரையில், 'கலைஞரின் இதயத்தில் எனக்கு என்றும் தனி இடம் இருந்தது. கலைஞரின் வாழ்க்கை ஒரு சிறந்த புத்தகம். எஸ்.பி.முத்துராமன் கலைஞரைப் பற்றி நிறைய தகவல்களை எனக்கு கூறியுள்ளார். எஸ்.பி.முத்துராமன் கலைஞரைப் பற்றி கூறிய போது கலைஞர் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் எனக்கு அதிகமானது. எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் கலைஞர். அவர் எழுதிய பராசக்தி பட வசனங்களை பேசி ஒரே நாளில் சிவாஜி உச்ச நட்சத்திரம் ஆனார்.

 

எம்.ஜி.ஆருக்காக மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மலைக்கள்ளனுக்கு வசனம் எழுதி வெற்றி படங்களாக்கினார், கலைஞர் 1977-ஆம் ஆண்டு காரில் மியூசிக் அகாடமி பகுதியில் சென்று கொண்டிருந்தேன். பின்னால் ஒரு வாகனம் வந்தது. கண்ணில் கருப்பு கண்ணாடி கலைஞர் என தெரிந்து வழி விட்டேன். எனது காரை கடக்கும் போது கலைஞர் என்னைப் பார்த்து அன்புடன் சிரித்து கைகளை ஆட்டினார். என்னை பார்த்து அன்புடன் சிரித்த அந்த சிரிப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதுதான் கலைஞரை முதன் முதலில் நான் பார்த்தது' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்