Advertisment

''பிஹார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் நமக்கு பாடம் எடுக்கின்றன..''-அண்ணாமலை பேச்சு

bjp

திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறியதாகதமிழகம் முழுவதும் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னைவள்ளுவர் கோட்டத்தில்அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்வில் பேசிய அண்ணாமலை, ''150 சதவிகிதத்திற்கு மேலே சொத்து வரியை உயர்த்தி உள்ளார்கள். சொத்து வரியை உயர்த்துவதுமூலமாகசாதாரண மக்கள், வாடகை வீட்டில் வசிக்கும் மக்களுக்குஎன்னென்னபிரச்சனைகள் வருகிறது, பொருளாதார மந்தம் எப்படி ஏற்படுகிறது என எல்லோரும் சொன்னார்கள். குறிப்பாக திமுக அரசுபெட்ரோல்,டீசல்விலையைகுறைப்பதாகச் சொல்லியிருந்தது. ஆனால்பெட்ரோலுக்குமட்டும் 3 ரூபாய் குறைத்துள்ளார்கள். பிரதமர் மோடி நவம்பர்மாதத்தில் இருந்துதற்போது வரை பெட்ரோல், டீசல்விலையைஇரண்டு முறை குறைத்துள்ளார்கள்.

Advertisment

புதுச்சேரிக்கு அருகாமையிலே என் வீடு இருக்கிறது. பார்டரைதாண்டி விட்டால் ஒரு லிட்டர்பெட்ரோல்96 ரூபாய்பார்டருக்குஇந்த பக்கம் தமிழகத்தில் 102 ரூபாய் 72 காசு. 6 ரூபாய் வேறுபாடு இருக்கிறது. தமிழகத்தில்டீசல்94 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில்ஜஸ்ட்பார்டரைதாண்டி புதுச்சேரி சென்றால் 86 ரூபாய் ஒரு லிட்டர்டீசல். 8 ரூபாய் வேறுபாடு இருக்கிறது. இந்தியாவிலேயே 1967-க்குபிறகு வந்த ஆட்சி, திராவிடமாடல்என்று சொல்லும் நீங்கள்...பிஹார், உத்தரப் பிரதேசம் பின்தங்கியுள்ளதுஎனச்சொல்லும் நீங்கள்... அங்கெல்லாம் 12 ரூபாய்பெட்ரோலுக்குவிலை குறைந்திருக்கும் பொழுது மார் தட்டிக் கொண்டிருக்கும் திமுக அரசு ஏன்விலையைகுறைக்க முடியவில்லை.

1967-ல் இருந்து நாம்தான் (தமிழ்நாடு) முன்னேஇருக்கோம்என்று சொல்கிறீர்கள். ஆனால்பிஹார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள்நமக்குபாடமெடுத்துக்கொண்டிருக்கிறது. பிரதமர்பெட்ரோல்விலையைக் குறைத்த பிறகு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் கூடபெட்ரோல்விலை குறைந்துள்ளது என்றால், இந்த திமுக அரசுக்கு மனசாட்சி இல்லை என்றுதானே அர்த்தம்'' என்றார்.

Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe