Advertisment

இது தொடக்கப்புள்ளியா அல்லது தப்பித்துக்கொள்வதற்கான முற்றுப்புள்ளியா?- ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

Is this the starting point or the end point for escape? -Former Minister RP Udayakumar Question!

கடந்த 10 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, "இந்த நிதிநிலை அறிக்கை என் பெயரில் வெளியிடப்பட்டாலும், இதில் பலரது உழைப்பு இருக்கிறது. முதல்வர் காட்டிய வழியில் இந்த நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.

Advertisment

தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் பொதுசந்தா கடன் 2.63 லட்சமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த கடன் 5.24 லட்சம் கோடியாகவும், தமிழகத்தின் மொத்த நிதிப்பற்றாக்குறை 92 ஆயிரம் கோடியாகவும் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறையில் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டது இல்லை. கரோனா வருவதற்கு முந்தியே இந்த சரிவு தொடங்கிவிட்டது" என்றார்.

Advertisment

Is this the starting point or the end point for escape? -Former Minister RP Udayakumar Question!

இந்நிலையில், இன்று வெளியான வெள்ளை அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரின் கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில், கொடுத்த வாக்குறுதிகளைச் செய்துகொடுப்பதற்கு திமுக வெளியிட்டுள்ள அறிக்கை தொடக்கப்புள்ளியா? அல்லது தப்பித்துக்கொள்வதற்கான முற்றுப்புள்ளியா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ''நிதிநிலை அறிக்கையில் துறைக்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு, அதனால் இழப்பு எவ்வளவு என்பதை நீங்கள் விவாதத்திற்கு வைத்தால் விவாதிப்பதற்கு எல்லோரும் தயாராக இருக்கிறார்களே. இந்த நாட்டு மக்கள் அந்த விவாதத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்களே. ஆகவே நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை செய்து கொடுப்பதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்கப்புள்ளியா? அல்லது கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்வதற்கான முற்றுப்புள்ளியா?''என்றார்.

RB uthayakumar ptr palanivel thiyagarajan admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe