Skip to main content

ஸ்டாலின் கோரிக்கை - முரண்டு பிடிக்கும் மூத்த அமைச்சர்கள்!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
anna

 

ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த மூத்த அரசியல் தலைவர் கலைஞர் வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலிவடைந்து போய் உள்ளார்.   அதிலும் கடந்த சில தினங்களாக உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   கட்சி பேதமின்றி அனைத்துக்கட்சி தலைவர்களும் காவேரி மருத்துவமனை வந்து நலம் விசாரித்து சென்றனர்.  இந்நிலையில் கலைஞரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிவித்துள்ள நிலையில்,  அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.  

 

கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்றும்,   தொண்டர்களின் இத்தகையை கோரிக்கையை அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மெரினாவில் கலைஞரின் உடலை நல்லடக்கம் செய்ய ஸ்டாலின் தரப்பில் இருந்தும் அனுமதி கோரப்பட்டுள்ளது.    முதல்வர் ஈபிஎஸ் , துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், டிடிவி தினகரனும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், அதிமுகவின் சீனியர் அமைச்சர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  மூத்த அமைச்சர்கள் முட்டுக்கட்டை போட்டதால் இந்த பிரச்சனை இழுபறியில் இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

மெரினாவில் சீறிப் பாய்ந்த சொகுசு கார்கள்! மடக்கி பிடித்த போலீஸ் 

Published on 12/03/2023 | Edited on 12/03/2023

 

Luxury cars in the marina! The police who got wrapped up

 

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டதாக அதிநவீன சொகுசு கார்களை சென்னை போக்குவரத்து போலீஸார் பிடித்து அபராதம் விதித்தனர்.  

 

சென்னையைச் சேர்ந்த தனியார் கார் பராமரிப்பு நிறுவனம் தனது நிறுவனத்தின் ஒரு நிகழ்ச்சிக்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்த சொகுசு கார்களை சென்னைக்கு எடுத்துவந்தது. அந்த கார்களின் அணிவகுப்பு இன்று காலை சென்னை ஈ.சி.ஆரில் நடந்தது முடிந்தது. அதன்பிறகு அதில் ஆறு சொகுசு கார்கள், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் சீறிப் பாய்ந்தன. இதனைக் கண்ட காமராஜர் சாலையில் போக்குவரத்து கண்காணிப்பில் இருந்த போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தி பிறகு அனைத்து கார்களுக்கும் அபராதம் விதித்தனர். 

 

பிடிப்பட்ட கார்களை காவல்துறையினர் காமராஜர் சாலையில் வரிசையாக நிறுத்தி வைத்தனர். இதனைக் கண்டு அங்கிருந்த மக்கள் அந்த விலை உயர்ந்த சொகுசு கார்கள் அருகே நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர். 

 

 

Next Story

அண்ணா சிலைக்கு அவமரியாதை

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

Disrespect to Anna's statue

 

விழுப்புரத்தில் முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

புதுச்சேரி விழுப்புரம் சலையில் உள்ள கண்டமங்கலம் பகுதியில் அண்ணா சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணாவின் சிலைக்கு ஆ.ராசாவின் புகைப்படத்தை மாட்டி, புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, சிலையின் முகத்தை திமுக கொடி கொண்டு மூடியுள்ளனர்.

 

தகவல் அறிந்து அங்கு வந்த காவலர்கள் அண்ணாவின் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த காலணி மற்றும் ஆ.ராசாவின் புகைப்படத்தை அகற்றி விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.