Advertisment

நாட்டை போலீஸ் கையில் கொடுத்துவிட்டு முதல்வர் என்ன செய்கிறார்?- ஸ்டாலின் கேள்வி!

 Stalin's question eps

Advertisment

தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினரால்விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டஜெயராஜ்,பென்னிக்ஸ்ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தநிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான வழக்குநீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று சி.பி.ஐ.-க்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, பல்வேறு தரப்பினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ், பென்னிக்ஸ்மரண வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், ஊடகத்தின் இரண்டு நாள்அழுத்தத்தால் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றியுள்ளார் முதல்வர் எனத் தெரிவித்தஸ்டாலின், நீதி வழங்கும் அரசியல் துணிவு அரசுக்கு இருந்திருந்தால் உயிர் பறித்த போலீசார் சுதந்திரமாக உலவ முடியுமா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின்,தென்காசி வீரகேரளம்புதூரில் போலீஸ் விசாரணைக்குச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் என்பவர் மரணமடைந்துள்ளார். காவல்துறையினர் தாக்குதலால்குமரேசன் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரே வாரத்தில் நான்காவது மரணம் இதுபோன்றுஏற்பட்டுள்ளது. நாட்டை போலீஸ் கையில் கொடுத்துவிட்டு என்ன செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் எனஸ்டாலின் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

incident police sathankulam
இதையும் படியுங்கள்
Subscribe