ADVERTISEMENT

கலைஞர் பற்றி நினைவு கூறும்போது உணர்ச்சி வயப்பட்டு கண் கலங்கிய ஸ்டாலின்...!

04:02 PM Mar 25, 2019 | Anonymous (not verified)

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மனையும் ஆதரித்து பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அப்போது, ஏற்கனவே ஆட்சியின் கொடுமை, இப்போது வெயிலின் கொடுமையில் இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்ட அவர், ஆட்சியின் கொடுமையில் இருந்து ஒருமாத காலத்தில் விடுவித்து விடுவோம் என கூறினார். தமிழகத்தில் இருக்கும் முதலமைச்சரை போல எடுபிடி முதலமைச்சரை பார்க்கமுடியாது என்றும் தன்னுடைய பதவிக்காகவும், பினாமிகளுக்காகவும் ஆட்சி செய்து கொண்டு இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் குற்றம் சாட்டினார். அவர் அமைச்சராக இருக்கும் நெடுஞ்சாலை துறையில் பல ஊழல்கள் நடந்துள்ளதாகவும், 3500 கோடி ரூபாய் அளவிற்கு டெண்டர் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது என்றும் கூறிய அவர், தனது நண்பர் செய்யாதுரைக்கு டெண்டர்கள் ஒதுக்கி முதலமைச்சர் முறைகேடு செய்துள்ளார் என்றார்.

குட்கா விவகாரத்தில், 8 அமைச்சர்கள் பட்டியலோடு 89 கோடி ரூபாய் வழங்கப்பட்ட ஆவணங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் கைப்பற்றப்பட்டன என்று கூறிய அவர், மோடி ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி கடந்த முறை வாக்கு சேகரித்தார். ஆனால் இன்று எடப்பாடியோடு கூட்டணி வைத்ததன் மூலம் ஊழல் ஊழலோடு கூட்டணி வைத்துள்ளது என நிரூபித்துள்ளார் என்றார். பாதுகாப்பு துறையில் ஊழல் செய்தவர்தான் மோடி என்றும், அவர் மீண்டும் ஜெயிக்க முடியாது என்பதால் இப்போது மக்களை ஏமாற்ற நாடாகமாடுகிறார் என்றும் கூறிய ஸ்டாலின், எனவேதான், எடப்பாடியை மோடிக்கு பிடிக்கிறது என்றார். தர்மயுதத்தின் விலை என்ன என்று பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கும் தான் தெரியும் என்றும், ஜெயலலிதாவிற்கு உண்மையாக இல்லாமல் மக்களை இருவரும் ஏமாற்றி வருகின்றனர் என்றும் தெரிவித்த அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய தண்டனை பெற்று தருவதே தி.மு.க ஆட்சியின் கொள்கையாக இருக்கும், தனது உறுதியாக இருக்கும் என்றார். எடப்பாடி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பதை அதிமுகவோடு கூட்டணி அமைத்துள்ள மருத்துவர் ராமதாஸிடம் கேட்கலாம் என்றும் அதிமுக கட்சியை அமித்ஷாவிடம் அடமானம் வைத்துள்ளதாகவும், அதை மீட்கவே முடியாது என்றும் கூறிய அவர், மோசடி தனத்திற்கு சட்டம் தண்டனை கொடுக்கும் என்றும் மோடிக்கு மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.


கோமாளிகளும், ஊழல்வாதிகளும் இருக்கக்கூடிய கேபினட் தமிழகத்தில் உள்ளது என்று கூறிய அவர், முட்டை ஊழல் சரோஜா, பருப்பு ஊழல் காமராஜ் என பட்டியலிட்டார். தனக்கு வாழ்வு தந்த ஜெயலலிதாவின் வீடு புகுந்து திருடியவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், கொடநாடு விவகாரத்தில் சயன், முதலமைச்சர் மீது புகாரளிக்க காட்டயப்படுத்தபட்டதாக வீடியோவை செட்டப் செய்து வெளியிட்டு உள்ளனர் என்றும் கூறியதோடு, திராணி, தெம்பு இருந்தால் சயனை நேரடியாக சொல்ல சொல்லுங்கள் என்று சவால் விட்டார்.


கலைஞரிடம் கடைசியாக பேசும்போது திமுக ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தேன் என்று கூறி உணர்ச்சி வசப்பட்ட அவர், கலைஞர் உயிரோடு இருக்கும் போது அதை நிறைவேற்ற முடியவில்லை என்று குரல் தழுதழுத்தார். தான் கலைஞரின் மகன் அவர் சொல்லை மீறியதும் இல்லை, அவர் பாதையில் இருந்து மாறியதும் இல்லை என்று கூறியதோடு கலைஞர் வழியில் சொன்னதை செய்வோம், கண் கலங்கியபடி செய்வதை சொல்வோம் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT