ADVERTISEMENT

மீண்டும் பரப்புரையை தொடங்கும் ஸ்டாலின்...

02:30 PM Mar 14, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு, தற்போது தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருந்தது. அதேபோல் நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி இருந்தது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்குவது என்பது குறித்தும், தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்தும் முடிவெடுக்க, தேர்தல் பரப்புரையை ஒத்திவைத்திருத்தர் திமுக தலைவர் ஸ்டாலின். இந்நிலையில் நாளை திருவாரூரில் இருந்து மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்க இருக்கிறார் ஸ்டாலின் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT