சபாநாயகருக்கு எதிரான தீர்மானம்?  wait and see... -ஸ்டாலின்

சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் அறையில் பதவியேற்றுக்கொண்டனர். அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

stalin

எதிர்கட்சியாக உங்களின் செயல்பாடு எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு, சட்டமன்றம் கூடும்பொழுது அதை நீங்கள் நேரடியாக பார்ப்பீர்கள் என்று பதிலளித்தார்.

சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு, wait and see, பொறுத்திருந்து பாருங்கள் சட்டமன்றம் கூடியதும் எங்களது முடிவை தெரிவிக்கிறோம் என்று கூறினார். முதல்வர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு சட்டமன்றம் கூடும் தேதி இன்னும் அறிவிக்கவில்லை, அறிவித்தவுடன் அதுகுறித்து முடிவெடுப்போம் என்று தெரிவித்தார்.

MLA stalin
இதையும் படியுங்கள்
Subscribe