ADVERTISEMENT

ஸ்டாலின் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை - ராமதாசுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி! 

04:51 PM Apr 24, 2019 | Anonymous (not verified)

சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , அரசு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமெனக் கூறி, திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது இது பற்றி நான் கூறியது ராமதாசுக்கு சரியாக செல்லவில்லை என்று நினைக்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு சாலைகள் போடுவதை தடை செய்யவில்லை.

ADVERTISEMENT



சேலம் - சென்னை பசுமை வழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வகுத்துள்ள எவ்வித நிபந்தனைகளையும் தமிழக அரசு பின்பற்றவில்லை என்பதே நீதிமன்ற தீர்ப்பு 2017ம் ஆண்டு மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட பாரத் மாலா பரியோஜனா திட்டத்தில் சென்னை - மதுரை நெடுஞ்சாலை திட்டம்தான் சேர்க்கப்பட்டதே தவிர, சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் சேர்க்கப்படவில்லை. ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் கொண்டுவரப்பட இருந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை ஒரு தனி மனிதரின் ஆதாயத்திற்காகவே தமிழக அரசு மிகுந்த அக்கறை காட்டியது. அதுபோல் அரசியல் லாபத்துக்காக எந்த ஒரு திட்டத்தையும் பாமக போல் ஆதரிக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி இல்லை என்றும் கூறினார்.

ADVERTISEMENT



மக்களுக்கு பிடிக்காத திட்டங்களை கொண்டு வந்த அதிமுக, பாஜகவோடு பாமக கூட்டணி வைத்து பாவத்தை செய்து விட்டார் . பின்பு ராமதாஸ் தனது ட்விட்டரில் என்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைகுனிய வேண்டுமென்று கூறியிருக்கிறார். பெரியாரின் வழியில் வந்தவர் ஸ்டாலின் ஆகையால் அவர் எப்போதும் தலைகுனிய வேண்டிய அவசியம் இருக்காது வெற்றிநடை போடுவார் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT