Skip to main content

வளைகுடா தமிழர்களை குறிவைத்து  காய் நகர்த்தும் ஸ்டாலின்...

2021 தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்தாகிவிட்டது , கடந்த நாடாளுமன்ற தேர்தலின் திமுக பெற்ற பிரமாண்ட வெற்றி பாஜக கூட்டணி  கட்சிகளை  கடும் எரிச்சலூட்டியதுடன், தங்களுக்கு காங்கிரஸை காட்டிலும் திமுகதான் பிரதான எதிரி என்ற நிலையினையும் அடைய செய்திருக்கிறது.

திமுக வை நேரடியாக தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்து திமுகவின் பெயரின் களங்கம் ஏற்படுத்த  புது வியூகங்களை வகுக்க துவங்கி இருக்கிறது பாஜகவும் அதிமுக வும் நடந்து முடிந்த விக்கிரவாண்டி , நாங்குநேரி தேர்தல் விதி மீறல்களும் அதற்க்கு சாதகமாய் வந்த முடிவுகளும் அவர்களுக்கு மேலும் உத்வேகத்தை கொடுத்து இருக்கிறது என்கின்றனர் அரசியல்  விமர்சகர்கள்.

திமுக தலைமையை பற்றி  இந்து விரோதி , தமிழர் விரோதி ,தேசத்துரோகி  என தினம் தினம் ஒரு அவதூறு என சமூக வலை தளங்களில் தன் சர்ஜிக்கல் ஸ்ட்ரைட் ஐ துவங்கி இருக்கிறது  பாஜக, அவர்கள்  எதிர்பாராத விதமாக  சமூகவலைத்தளங்களில் செயல்படும் திமு கழக தொண்டர்களும்  வரலாற்று பக்கங்களை திருப்பி தினம் தினம் சரியான பதிலடி கொடுக்க துவங்கியது திமுகவிற்கு துருதிஷ்டத்திலும் கிடைக்கும் அதிஷ்டம் என்றே சொல்லலாம்.

 

 Stalin moves to target valaikuda Tamils ​​


என்னதான் தினம தினம் சமூகவலைத்தள போர் நடந்தாலும் திமுக தலைமை தன நிதானத்தை இழக்காமல் இலக்கை நோக்கி பயணிக்கிறது அதற்கு நடைபெற்று முடிந்த பொதுக்குழுவும் அதில் போடப்பட்ட தீர்மானமும் சாட்சி நடந்து முடிந்த பொதுக்குழுவில் போடப்பட்ட மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்று வெளிநாடுகளில் தோழர்கள் கிளை கழகம் துவங்கிக்கொள்ளலாம் என்பதே.

வெளிநாடுகளில் கிளை கழகம் துவங்கி என்ன ஆக போகிறது? என்பதே பெரும்பான்மையாவர்களின் பார்வை ! இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளுக்கு பிரதிநிதிகள் கிடைப்பதே சிரமம் வெளிநாடுகளில் , ஆனால் தமிழகத்தை சார்ந்த இருகட்சிகள்  ஐக்கிய அரபு அமீரகம் சவூதி கனடா பிரிட்டன் என  பல்வேறான நாடுகளில் ஆக்டிவ் ஆகா செல்லப்படுகிறது திராவிட  முன்னேற்ற கழகமும் , நாம் தமிழர் கட்சியும்தான் அந்த இரு காட்சிகள்  என்கிறது  கள ஆய்வு தரவுகள்.

வெளிநாடுகளில் இருப்பவர்கள் ஓட்டுரிமை இல்லையே அந்தக்கிளையை வைத்து என்ன பயன் என்ற கேள்வி எழலாம். ஆனால் கீழ்  உள்ள காரணிகள் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசியல்படுத்துவது  குறித்து உங்கள் நிலைப்பாட்டினையே  மாற்றிவிடும். இனி வரும் காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் வாக்கினை இந்தியா தூதரங்களில் பதிவு செய்யலாம் என்பதற்கான சட்டம் நாடாளுமன்ற கீழ் அவையில் நிறைவேற்றப்பட்டு  மேலவையில் நிலுவையில் உள்ளது என்பத ஒரு முக்கிய தகவல். இன்றைக்கும் தபால் ஓட்டுக்கள் என்றாலே திமுகவிற்குத்தான் என்று சொல்லும் அளவுக்கு சூழல் இருக்கும் நிலையில் அடுத்த இலக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள் ஓட்டுகள் திமுக தலைமையால் குறிவைக்கப்படுகிறது.  

 

 Stalin moves to target valaikuda Tamils ​​

 

மேற்சொன்ன காரணிகளை தாண்டி  வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெரும்பான்மையானவர்கள் பொறியாளர்களாக, தொழிலாளிகளாக பணிபுரிபவர்கள் அவர்களின் குடும்பத்தினர் இன்றைக்கும் தங்கள் கணவன் / மகன் / தந்தை யின் அரசியல் முடிவிற்கு ஏற்பவே வாக்கு செலுத்துவபவர்கள்.  ஆக ஒருவர் என்பது ஒரு வாக்கு இல்லை அது ஒரு குடும்பத்தின் குறைந்தபட்ச 3 வாக்குகளை பெற வழி வகை செய்யும். புள்ளி விவரத்த்தின் படி 4,500,000 புலம்பெயர் தமிழர்கள் உள்ள நிலையில், வளைகுடா நாடுகளில், ஐக்கிய அரபு அமீரகத்தில் - 5 லட்சம் - 6 லட்சம், சவுதி அரேபியா 7 லட்சம், ஓமான்/குவைத்/பஹ்ரைன்/கத்தார் இல் தோராயமாக 10 லட்சம் தமிழர்கள் உள்ளனர்.                                            -

இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கீடு பல லட்சம் கோடிகள் பல தரப்பட்ட நாடுகளின்  பட்டியலில் முதலில் வருவது ஐக்கிய அரபு அமீரகம்  அங்கிருந்து மட்டும்  இந்தியாவிற்கு அனுப்பப்படும் பணத்தின் மதிப்பீடு மட்டும் ஒரு லட்சம் கோடி என்பது  அனைவரையும்  பிரம்மிக்க வைக்கிறது  புள்ளிவிவரபடி. அந்த ஐக்கிய அரபு நாடுகள் ( துபாய் - அபுதாபி )திமுக வின் செய்லபாடுகள் மற்ற நாடுகளை விட மிக மிக அதிகம் , அமீரகத்தின் செயல்பாடுகளை சற்று  அலசலாம்.

கடந்த 2017   யில் அரசு சார்பு விழாவில் அங்குள்ள அரசு நிர்வாகிகளுடன் திமுக தோழர்கள் ஓங்கிணைந்து ஒரு நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்கள் அதற்க்கு திமுக கழக தலைவர் ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதே ஆண்டு அங்குள்ள தோழர்கள் தங்களுக்கான அமைப்பாளரை தேர்வு செய்தார்கள். அவர் திருச்சியினை சார்த்த தொழிலதிபர் அன்வர் அலி.

 

 Stalin moves to target valaikuda Tamils ​​


பின்பு 2018 ஆம் ஆண்டு ஒன்றில் மட்டும் இரண்டு முறை  திமுக கழக மகளிர் அணி தலைவி திருமதி கனிமொழி  சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 2019 துவக்கத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்  KN நேரு   மற்றும் துரை  முருகன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
 

கடந்த வாரம் திருமதி தமிழச்சி  தங்கபாண்டியன்  ஒருவார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  சார்ஜா அரசு சார்பில் நடைபெற்ற 38 வது சார்ஜா சர்வதீச புத்தக கண்காட்சி  மற்றும்  திமு கழக தோழர்களால் துபாயில் நடத்தப்பட்ட வணக்கம் திராவிடம் என்ற கலை இலக்கிய கலாச்சார பண்பாட்டு விழாவில்  பங்கேற்று சிறப்பித்தார்.  

களத்தில்  விசாரித்த பொது மேல்மட்ட தலைவர்களை தவிர்த்து திமுக  மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரின் TRP  ராஜா வின் சுற்றுப்பயணம் பேச்சாளர்கள் தமிழன் பிரசன்னாவின் சுற்றுப்பயணம் என அடுக்கி கொண்டே செல்கிறார்கள்  அங்குள்ள உடன்பிறப்புக்கள் ,இரண்டே ஆண்டில் ஏன் இத்துணை நிகழ்ச்சிகள் ? கராணம் இல்லாமால் இருக்குமா  என்று ஆய்வு செய்ததற்க்கு பிறகுதான் தெரிகிறது  ஐக்கிய அரபு அமீரகத்தில் ( துபாய் / அபுதாபி ) பணிபுரியும் 5 லட்சம் தமிழர்களையும் அவர்களை சார்ந்துள்ள அவர்களின் தமிழக குடும்ப உறுப்பினர்களையும் குறிவைத்தே நடந்து கொண்டு இருக்கிறது இந்த அரசியல் நகர்வு  , இன்றைக்கு துபாயினை மையமாக கொண்டு இயங்கும் அமீரக திமுகவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள்  தமிழகத்தில் இருந்த வரை எந்த கட்சியினையும் சாராதவர்கள் இன்னும் சொல்லப்போனால் அரசியல் விருப்பமற்றவர்கள் , இவ்வளவு மக்களை  திராவிட சித்தாந்த வழியில் அரசியல் படுத்துவதில் வெற்றி கண்டு இருக்கிறார்கள் அவர்களை பலவேறு நிகழ்ச்சிகள் மூலமும் பொது சேவையின் மூலமும் கழகத்தில் இனைய வைத்து கொள்கை நெறியுடையன் பயணிக்க வைத்திருக்கிறார்க   அமீரக அமைப்பின் நிர்வாகிகள் , அமீரகத்தில்  திமுக அமைப்பாளராக  இருக்கும் அன்வர் அலி என்ற துருப்பு சீட்டினை திமுக தலைவர் தளபதி சரியாக கையாண்டு இருக்கிறார் , அமீரகத்தினை போன்றே சவூதி , கத்தார் ,ஓமான் பஹ்ரைன் ,குவைத், கனடா, பிரிட்டன் போன்ற   இதர நாடுகளிலும் இதே  இலக்கினை நோக்கி காய்கள் நகர்த்தப்பட்டு கொண்டு இருக்கிறது என்றாலும்  துபாய் கழகத்தினை பிற நாடுகளில் பயணிக்கும் நிர்வாகிகள் முன் உதாரணமாக எடுத்துக்கொள்ளும்  அளவு வெற்றி கண்டு விட்டார்கள் என்பது நிதர்சனம்.

இத்தனை கள சோதனைகளையும் செய்துவிட்டு தான் கடந்த பொதுக்குழுவில் வெளிநாடுகளில் செயல்படும் குழுக்களுக்கு அங்கீகாரம் என்ற அறிவிப்பினை விட்டு தொண்டர்களை குஷி படுத்தி  இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். பிற இயக்கங்களுக்கு இன்னும் எட்டாக்கனியாக இருக்கும் வலுவான கட்சி கட்டமைப்பினை மிக சரியான திட்டமிடலுடன் குறிவைத்து பயணிக்கிறார் ஸ்டாலின். இதன் தாக்கம் எவ்வகையில் தமிழக அரசியலில் இருக்கும் என்ற வினாவுக்கான பதிலை  எதிர்வரும் காலமே சொல்லும்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்