
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த திமுக வேட்பாளர்கள் அனைவரையும் ஒரே மேடையில்வைத்து பிரச்சாரம் செய்தார் மு.க. ஸ்டாலின். ஒவ்வொரு வேட்பாளர்களையும் தனித்தனியாக அறிமுகம் செய்துவைத்தார். அதிமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை குறித்தும் பிரதமர் மோடியின் கறுப்புப் பண அறிவிப்புகுறித்தும் குற்றம்சாட்டினார்.
மீண்டும் தமிழகத்தில் மதச்சார்பற்ற இந்தக் கூட்டணி வெற்றிபெற்றால் மாணவர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பல்வேறு நன்மைகளை இந்த அரசு நிச்சயம் செய்யும்என்று கூறினார். அங்கிருந்து புறப்பட்டு சத்திரம் பேருந்து நிலையம் வழியாக கரூரில் தன்னுடைய பரப்புரையை நிகழ்த்த புறப்பட்டுச் சென்றார்.கரூர் செல்லும் வழியில் குளித்தலையில் பரப்புரையை மேற்கொண்ட அவர், உடனடியாக காரைவிட்டு இறங்கி சாலையில் நடைப்பயணமாக கடைவீதியில் வாக்கு கேட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார். இதைக் கண்ட பொதுமக்கள் உற்சாகத்தில் வரவேற்பளித்து கையசைத்து உற்சாகமாக வரவேற்றனர்.
Follow Us