Stalin first criticized, summoned to appear in special court ...!

தமிழக முதல்வர் பழனிசாமி தரப்பில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 25ஆம் தேதி நேரில் ஆஜராக, எம்.பி.மற்றும் எம்.எல்.ஏ.-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை, கொளத்துார் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி, நிவாரண உதவிகளை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

Advertisment

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “அறிக்கை நாயகன் என்று என்னைச் சொல்லும் முதல்வர் பழனிசாமி ஒரு ஊழல் நாயகன்,” என்றுதமிழக முதல்வர் குறித்து பேசியிருந்தார்.ஸ்டாலினின் கருத்து முதல்வரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக,முதல்வர் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

பின்னர் அந்த வழக்கு சென்னை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் முதலாவது சிறப்புநீதிமன்றத்தில் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.சுதா முன் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு வழக்கு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பிப்ரவரி 25ம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.