Advertisment

நாங்குநேரி இடைத்தேர்தல்... திண்ணைப் பிரச்சாரத்தில் ஸ்டாலின்...

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

Advertisment

stalin campaigning in nanguneri

நாங்குநேரி சட்டமன்றத்திற்கு உட்பட்ட பாளையஞ் செட்டிகுளம், மேல குளம், அரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு கேட்டு திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், "உங்கள் பகுதியில் உள்ள குறைகளை என்னிடம் எடுத்துச் சொல்லி உள்ளீர்கள். முதியோர் உதவி தொகை கிடைக்காதது. வேலை வாய்ப்பு , ரேஷன் கடைகள் இல்லாமல் இருப்பது , ரேஷன் கடைகள் இருந்தால் அவை முறையாக செயல்படாமல் இருப்பது ,பேருந்து வசதி , மருத்துவ வசதி இல்லாதது என பல்வேறு குறைகளை எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள் . சுய உதவிக் குழுக்களுக்கு போதிய நிதி உதவிகள் அளிக்காதது குறித்தும் முறையிட்டீர்கள் . எல்லாவற்றிற்கும் உள்ளாட்சிதேர்தல் நடத்தாதது தான் காரணம். ஆளும் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த தயங்குகிறது . தோற்று விடுவோம் என்ற பயம் தான் அதற்கு காரணம். நாங்களும் நீதிமன்றம் வரை சென்று முறையிட்டுள்ளோம். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

Advertisment

நாடாளுமன்ற, தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக வெற்றி வாய்ப்பு அளித்தது போல இந்த முறையும் திமுக ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகருக்கு வாக்களிக்க வேண்டும். அவர் வெற்றி பெற்றது நீங்கள் கூறிய குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். நாங்களும் உடனிருந்து அதை செய்வதற்கு உறுதுணையாக இருப்போம்" என்றார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="6bccc53b-fb4c-4a9d-99db-6a0ebf4aad50" height="304" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300_18.jpg" width="507" />

nanguneri stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe