Advertisment

அமெரிக்காவில் ஸ்டாலின்; உற்சாக வரவேற்பில் தமிழர்கள்! (படங்கள்)

Advertisment

தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 15 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சான்ஸ்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை ,சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் இந்தியாவிற்கான துணைத் தூதர் சிரிகர்ரெட்டி மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளரும் அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திக்கேய சிவசேனாதிபதி மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆகியோர் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். அமெரிக்கா வாழ் தமிழர்களிடம் நலம் விசாரித்த முதல்வர், "தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

Advertisment

அவர்களின் உற்சாக வரவேற்பில் மகிழ்ந்த ஸ்டாலின், அங்கிருந்து புறப்பட்டு அவர் தங்கும் நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றார். இன்று சான்ஸ்பிரான்ஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்களுடன் கலந்துரையாடுவதுடன் முதல்வர் ஸ்டாலின்.சிறப்புரையாற்றவிருக்கிறார்

America cm stalin
இதையும் படியுங்கள்
Subscribe