Advertisment

’ராமதாசுக்கு வெட்கம் இல்லை; சூடு,சொரணை இல்லை’- ஸ்டாலின் கடும் விமர்சனம்

மக்களவை தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டது பாமக. இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாசை கடுமையாக விமர்சித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

Advertisment

sp

வேலூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம்சேரி ஊராட்சி சபை கூட்டத்தில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களிடம் கருத்து கேட்டார். பின்னர், சோலூர் வாக்குச்சாவடி முகவர்களிடையே ஸ்டாலின் பேசியபோது,

Advertisment

’’அதிமுகவின் கதை என்று புத்தகம் போட்டவர் ராமதாஸ். அன்று புத்தகம் போட்டுவிட்டு இன்று கூட்டணி வைத்துள்ளார். அதிமுகவின் கதை புத்தகத்தில் ஜெயலலிதா, எடப்பாடி எல்லோரையும் கடுமையாக விமர்சித்த அந்த பெரிய மனிதர் ராமதாஸ் இன்று அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கையெழுத்து போடுகிறார். ராமதாசுக்கு வெட்கம் இல்லை; சூடு,சொரணை இல்லை. அதிமுக - பாமக ஏற்கனவே கூட்டணி வைத்து தோற்றுப்போனார்கள். ராமதாசுக்கு நாட்டைப்பற்றி கவலை இல்லை. பணத்தைப் பற்றிதான் கவலை.’’என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

admk ambur stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe