Advertisment

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ். சிவசுப்பிரமணியன் காலமானார்

S. Sivasubramanian dmk

Advertisment

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆண்டிமடம் எஸ். சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

கலைஞர், மு.க.ஸ்டாலின், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த எஸ். சிவசுப்பிரமணியன் 1998 _ 2004 ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகவும், 1989 ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும், 1971_ 1976 ஆண்டிலும் 1986_1990, ஆண்டிலும் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும், பெரம்பலூர் மாவட்டக் கழக செயலாளராகவும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டக் கழக துணை செயலாளராகவும் பணியாற்றியவர். தற்போது திமுகவில் சட்ட திருத்தக் குழு உறுப்பினராக இருந்தவர்.

எஸ். சிவசுப்பிரமணியன் மகன் எஸ்.எஸ்.சிவசங்கர். ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியில்முறையும், குன்னத்தில் ஒருமுறையும்போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் மாவட்ட திமுக செயலாளராக உள்ளார்.

andimadam Ariyalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe