பரப்புரைக்கு வாங்கிய வாகனம்! - 'அல்வா' கொடுத்த கட்சித் தலைமை!

srivilliputhur mla sandhira prapa

ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரபிரபா முத்தையா. இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளரை36ஆயிரம்வாக்கு வித்தியாசத்தில்வெற்றிபெற்றார். இதனால், இந்தச்சட்டமன்றத் தேர்தலிலும்ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்தார். அவருக்கு எப்படியும் சீட் கிடைத்துவிடும் எனச் சொல்லப்பட்டது.

அந்த வகையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக, வங்கிக் கடன் பெற்று, பிரசார வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார்சந்திரபிரபா. இந்நிலையில், அதிமுக தலைமை, வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதில்,ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு மான்ராஜ் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்தசந்திரபிரபாவின் ஆதரவாளர்கள் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரசார வாகனம் வாங்கிய எம்.எல்.ஏசந்திரபிரபா, சீட் கிடைக்காததால் பெரும் ஏமாற்றத்தில் உள்ளாராம்.தொகுதி மக்களிடம் நல்ல செல்வாக்கில் உள்ளசந்திரபிரபாவுக்கு "தமிழ்நாட்டின் சிறந்த பெண் எம்.எல்.ஏ." எனும் விருதை கேரள ரோட்டரி அமைப்புவழங்கியது குறிப்பிடத்தக்கது.

admk SANTHIRA PRAPA MUTHAIYA Srivilliputhur
இதையும் படியுங்கள்
Subscribe