Advertisment

சீமான் பொய் பேசுவதை நிறுத்தணும்... திருமுருகன் காந்தி யாரு?... கடும் எச்சரிக்கை விடுத்த இலங்கை தமிழ் எம்.பி!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும், பிரபாகரன் உடன் இருந்தது குறித்தும், ஈழப் பிரச்சனைகள் தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவையில்லாமல் மேடைதோறும் பேசி வருகிறார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை மட்டகளப்பு எம்.பி. யோகேஸ்வரன், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, சீமான் போன்ற அரசியல்வாதிகள் எல்லா பிரச்சனையும் தீர்ந்த பிறகு, வெறும் பேச்சு பேசி வருவதாக தெரிவித்தார்.

Advertisment

srilanka mp

seeman

alt="film" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="aa52d9a9-6cfa-4922-9331-fa449ea77951" height="355" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202019-12-02%20at%204.55.45%20PM.jpeg" width="592" />

Advertisment

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்று கேள்வி எழுப்பினார் யோகேஸ்வரன். விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்களாக எப்போதும் இருந்துள்ளார்கள். அப்படி இருக்கும் போது ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இங்குள்ளவர்கள் பேசுகிற பேச்சால் தங்களுக்குத் தான் பிரச்சனை என்றார். அதோடு, சீமான் தாங்கள்தான் கொன்றதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் ஆதாயத்திற்கு பேசும் பேச்சால் தங்களுக்கு தான் பிரச்சனை என்று வருந்தியவர். இவர்கள் தொடங்கி வைத்துவிட்டு உட்கார்ந்து விடுவார்கள் பாதிப்பு அங்குள்ள மக்களுக்கு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பேசினார்.

Speech controversy politics srilanka thirumurugan ganthi seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe