மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டி சென்னையில் ஸ்ரீ மஹா சண்டி யாகம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் மாபெரும் சண்டியாகம் நடைபெற்று வருகிறது. 21.05.2019 செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த யாகம், இன்றும், நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ யசோதா வெளியிட்டுள்ள செய்தியில், இந்த யாகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை 4.30 மணி முதல், வியாழக்கிழமை இரவு 7 மணி வரை விநாயகர் பூஜை, புண்ணிய கவசனம், எஜமான சங்கல்பம், கோ பூஜை, மஹா கணபதி ஹோமம், மஹாலஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹா பூர்ணாஹூதி, துர்கா கணபதி பூஜை, சங்கல்பம், மூல மந்திர ஹோமம், வேத பாராயணம், 64 பைரவர், 64 யோகினி பலி பூஜை, மஹா பூர்ணா ஹூதி தீபாராதனை, கணபதி பூஜை, புண்யாஹம், எஜமானர் சங்கல்பம், ஜெயதுர்கா ஹோமம், பாராயணம், பூர்ணாஹூதி சமர்ப்பணம் என நடக்க உள்ளது.

Chennai sri maha chandi homam tamilnadu congress
இதையும் படியுங்கள்
Subscribe