Skip to main content

அரசியலை விட்டே விலகத் தயார்... எஸ்.பி.வேலுமணி

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

 

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளைக் கூறாமல் தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும். அப்படி ஆதாரம் இருக்கும் என்று நம்பினால், இன்றே என் பதவியினை முழுமனதுடன் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
 

எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து, அதற்கான பணிகளில் அரசின் நிர்வாக இயந்திரம் மிக முனைப்புடன் செயல்படும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்த முழு முயற்சி மேற்கொண்டு படுதோல்வியுற்ற திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின், அரசைக் களங்கப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் உள்நோக்கத்துடன், இல்லாத ஒன்றை இருப்பதைப் போல இட்டுக்கட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மீது குற்றம் சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

mkstalin


 

இந்த குற்றச்சாட்டும், அவராக சொல்லுகின்ற குற்றச்சாட்டு இல்லை. பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுமான பணிகளில் எம்-சாண்ட்ஐ பயன்படுத்திவிட்டு, ஆற்று மணலை பயன்படுத்தியது போல விலைப்புள்ளியை வழங்கியதாக உண்மைக்கு முற்றிலும் புறம்பான செய்தியை திமுக ஆதரவு பெற்ற இயக்கம் ஒன்று அறிக்கை வெளியிட்டது. இந்த திரிக்கப்பட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
 

திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறையினை தன் பொறுப்பில் வைத்திருந்த மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய பணி என்ன? ““ஜீரோ””!! தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்த போதும் அவர் ஆற்றிய பணிகள் என்ன ? ““ஜீரோ”” !! இப்படி, ஜீரோ உள்ளாட்சி அமைச்சர் என்றும், ஜீரோ துணை முதல்வர் எனும் பெயர் வாங்கிய ஜீரோ ஸ்டாலின், தான் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன் நம்மைப் பார்த்து குறை சொல்கிறார், குற்றம் சுமத்துகிறார்.
 

முதலில் சென்னை மாநகராட்சியில் பணிகள் ஏதும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், சென்னை மாநகரில் வார்டுகள் தோறும் சிறப்பாக நடைபெற்று வரும் பணிகளை மக்கள் நேரில் பார்த்து, உணர்ந்திருக்கின்ற காரணத்தால், இந்த புளுகு எடுபடாது என்று சொல்லி, ஜமக்காளத்தில் வடிக்கட்டிய வேறொரு புளுகை அவிடிநடிநத்து விட்டிருக்கிறார்.
 

ஆனால், நம்மைக் குற்றம் சொல்லப்போய், சென்னை மாநகராட்சியில், உள்ளாட்சித் துறை மூலம் நடக்கும் எண்ணற்ற பணிகள் பற்றி அவரையும் அறியாமல் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கின்றார் மு.க.ஸ்டாலின். மழைநீர் கால்வாடீநுடீநு அமைக்கும் பணிகள், நடைபாதை அமைக்கும் திட்டப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி தொடர்பான பணிகள், உலக வங்கி உதவியுடன் நடக்கும் திட்டங்கள் என்று அரசு ஆற்றிவரும் பணிகளையும், செயல்படுத்தும் திட்டங்களையும் பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டிருக்கிறார்.
 

ஆனால், அந்தப் பணிகளில் ஆற்று மணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுத்துவிட்டு எம்-சாண்ட் பயன்படுத்துவதாகவும், 1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது எனும் நஞ்சைக் கக்கி இருக்கிறார் ஸ்டாலின். ஏதேனும் தவறு செய்துவிட்டு, அதுபற்றி மக்கள் கேட்டால், உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறுவது ஸ்டாலினின் வழக்கம். தேர்தல் கூட்டணி அமைக்க கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பணம் கொடுத்த நிகடிநடிநவில் அப்படித்தான் சொன்னார் ஸ்டாலின்.
 

ஆனால், ஜெயலலிதா எங்களுக்கு அப்படி கற்றுக்கொடுக்கவில்லை. மக்கள் தான் எங்கள் எஜமானர்கள். அவர்களுக்கு பதில் சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். எதிர்க்கட்சிகள் நம் மீது பொய்க்குற்றம் சாடும்போது, அது பற்றிய உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது நமது கடமை என்கிற பாடத்தை கற்றுத் கொடுத்திருக்கிறார்.


 

 

அவர் எங்களுக்கு வழிகாட்டியுள்ளபடி, ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை எப்படி அடித்தளமே இல்லாத ஒரு குற்றச்சாட்டு, என்பதையும், அவரது அறிக்கையில் உண்மை என்பது ஒரு துளி அளவும் இல்லை என்பதையும், எத்தகைய காழ்ப்புணர்ச்சியுடன் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியது எங்களது கடமை என்ற வகையில், இதற்கான முழு விளக்கத்தையும் மக்கள் முன் வைக்கிறேன்.
 

பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள், தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி ( Tamiill Nadu Tender Transparrency Act) சட்டத்தின்படி முறையாக ஆன்லைன் மூலம் கோரப்பட்டு, விதிகளுக்குட்பட்டு ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்யப்படுகின்றன. அவ்வாறு முடிவு செய்யப்பட்டு, கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 ஆண்டுகளில், ஆற்று மணல் அல்லது M--Sand கலந்த சிமெண்ட் கலவைகள் கொண்டு ரூ.1164.85 கோடிக்கு பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

இது குறித்து சற்று விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ரூ.102.35 கோடி அளவுக்கு உட்புற கான்கீரிட் சாலைகளும், ரூ.65.18 கோடி மதிப்பீட்டில் நடைபாதை பணிகளும், ரூ.699.64 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகளும், ரூ.145.95 கோடி மதிப்பீட்டில் கட்டடப் பணிகளும், ரூ.144.69 கோடியில் ஸ்மார்ட் சிட்டி – சீர்மிகு நகரப்பணிகளும், ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் பாலப்பணிகளும், 2017-18ஆம் ஆண்டு முதல் நடப்பு மாதம் வரை மொத்தம் ரூ.1164.85 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

இவ்வாறு, நடைபெற்ற ரூ.1164.85 கோடி பணிகளில், மணல் சேர்த்து செய்யப்படும் கான்கிரீட் பணிகள் 33 சதவிகிதமே ஆகும். இதன் மதிப்பீடு ரூ.384.04 கோடி மட்டுமே ஆகும். இந்த கான்கிரீட் பணிகளில் கலக்கப்படும் M –Sand அல்லது ஆற்று மணலின் அளவு வெறும் 8.5 சதவிகிதம் மட்டுமே ஆகும். அதாவது, ரூ.32.67 கோடி அளவிலான கான்கிரீட் பணிக்கு மட்டுமே M –Sand அல்லது ஆற்று மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது. செயல்படுத்தப்படும் பணிகளின் மதிப்பே வெறும் ரூ.32.67 கோடி தான் என்னும் போது, அதில் ஏதோ ரூ.1000 கோடி முறைகேடு நடந்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது எவ்வளவு கடைந்தெடுத்த பொய் என்பதையும், அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் எந்த அளவுக்கு தன் தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளார் என்பதையும் தமிழக மக்கள் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
 

2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம், மாநிலம் முழுவதும் உள்ள ஆற்று மணல் குவாரிகளை மூடுமாறு உத்திரவிட்டது. உயர்நீதிமன்றம் கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளில் மணலைப் பயன்படுத்தத்தக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தியது.
 

இவ்வாறு ஆற்று மணல் குவாரிகள் மூடப்படும் சூழ்நிலையில், ஆற்றுமணல் இல்லாத காரணத்தால், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதனைக் கருத்தில் கொண்டு, ஆற்று மணலைப் போன்ற தரம் கொண்ட M-Sand-ஐ பயன்படுத்தி பணிகளை தொடர வேண்டுமென்று தமிழக அரசு அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியது.
 

மேலும், கான்கிரீட் தயாரிக்கும் பணிகளில், ஆற்று மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், M-Sand-ஐ பயன்படுத்தலாம் என்று பொதுப்பணித் துறையின் மூலம் ஆணை வெளியிடப்பட்டது. இந்த எம்-சாண்டின் விலை தான் ஆற்று மணலைவிட நூற்றுக்கு 50 சதவீதம் குறைவு என்று அளந்து விட்டிருக்கிறார் ஸ்டாலின்.

 

spvelumani



பொதுப்பணித்துறையானது, ஒவ்வொரு வருடமும் திட்டப் பணிகளுக்கு தேவைப்படும் பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிடும். அவ்வாறு ஆண்டுதோறும் பொதுப்பணித்துறை அளித்துள்ள M-Sand மற்றும் ஆற்று மணல் விலைப்பட்டியலை ஒப்பீட்டுப் பார்த்தால், எது விலைஅதிகம், எது விலை குறைவு என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
 

எம்-சாண்டின் விலை, 2017-18 ஆம் ஆண்டில் ஒரு கன மீட்டருக்கு ரூ.434.29 ஆகவும், அதே நேரத்தில் ஆற்று மணலின் விலை ரூ.168.00 ஆகவும் இருக்கிறது. அதேபோல, 2018-19 ஆம் ஆண்டில், எம்-சாண்ட் ரூ.777 ஆகவும், ஆற்று மணலின் விலை ரூ.168 ஆகவும், 2018-19ல் எம்-சாண்ட் ரூ.1250 ஆகவும், ஆற்று மணலின் விலை ரூ.447 ஆகவும், இருந்தது.
 

இதன்படி, கடந்த 2017லிருந்து 2018 வரை எல்லா காலகட்டங்களிலுமே எம்-சாண்ட் விலை ஆற்று மணலை விட மிக அதிகமாகவே பொதுப்பணித்துறையின் விலை பட்டியலில் உள்ளது. இதனையே தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் பின்பற்றுகிறது. இது கூட உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த எதிர்கட்சித் தலைவருக்கு தெரியாதது மிகவும் பரிதாபம் ஆகும்.
 

பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு அலுவலக விலைப் பட்டியலைவிட கூடுதலாக 10 முதல் 30 சதவீதம் வரை தற்போது வழங்குவதாக புகார் கூறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இது ஒப்பந்த நடைமுறைகளிலும், அதனைத் செயல்படுத்தும் வழிமுறைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான் என்று மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது.
 

ஒப்பந்தப் பணிக்குத் தேவையான பொருட்களின் விலை உயர்வு, காலதாமதம் முதலான காரணங்களால், ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையை ஏற்று அதில் நியாயம் இருக்கிறதா என ஆய்வு செய்து, அக்கோரிக்கை நியாயமானது என அறியும் பட்சத்தில் விலை உயர்வது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான்.
 

திமுக ஆட்சி காலத்திலேயே 2008ம் ஆண்டில் நடைபெற்ற கட்டடத்துறை பணிகளுக்கு 10 முதல் 45 சதவீதம் வரையிலும், தகன மேடை அமைப்பதற்கான பணிகளுக்கு 65 சதவீதம் வரை கூடுதலாகவும் வழங்கப்பட்டது.


 

 

திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பாலப் பணிகளுக்கு 35 முதல் 73 சதவீதம் வரை கூடுதலாக வழங்கப்பட்டது. 1999ம் ஆண்டு நடைபெற்ற சாலைப் பணிகளுக்கு 42 சதவீதமும், 2008ம் ஆண்டு நடைபெற்ற மின்துறை பணிகளுக்கு 24 சதவீதமும், பூங்கா பணிகளுக்கு 38 சதவீதம் வரையிலும் கூடுதலாக வழங்கப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் முழுமையாக பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தற்போது உள்ளது. எதற்கெடுத்தாலும், உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற முறையில் என்னை குற்றம் சொல்லும் மு.க.ஸ்டாலின், அவர் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தபோது, திட்டப் பணிகளை செயல்படுத்த மதிப்பீட்டினை விட அதிகமான சதவீதத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்பட்டதற்கு, அவர் தான் காரணமா? இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன கூறப்போகிறார்.
 

ஒவ்வொரு வருடமும் பொதுப்பணித் துறையின் விலைப்பட்டியல் பெற்று, பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டடத்துறை மூலம் மற்ற பணிகளின் செலவினங்கள், அதாவது வேலையாட்கள் செலவு (கூடுதலாக 15 சதவிகிதம் இரவு நேரப்பணி), வைபரேட்டர் செலவு, கான்கிரீட் பம்பிங் செலவு, கியூரிங் செலவு, மின்சார செலவு ஆகியவைகளின் விலைகளும் சேர்க்கப்பட்டு, அனைத்து பணிகளுக்கான விலைப் பட்டியல் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் மற்ற அனைத்து துறைகளுக்கும் ஆன் லைன் மூலம் தெரிவிக்கப்படும். இதன், அடிப்படையிலேயே அனைத்து துறைகளிலும் பணிகளுக்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகிறது.
 

இவ்வாறு வெளியிடப்பட்ட விலைப்பட்டியலின்படி, எம்-சாண்ட்ஐ மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் RMC M-30 Grrade கான்கிரீட் பணிக்கான விலை ரூ.8,073 / M3ஆகும். இப்பணியை ஆற்று மணல் கொண்டு செடீநுடீநுயும்போது இப்பணியின் விலை ரூ.7,873/ M3 ஆகும். ஆற்று மணலைக் கொண்டு செய்யப்படும் பணியின் செலவு குறைவு ஆகும். எம்-சாண்ட்ஐ கொண்டு செய்யும் பணியின் செலவு அதிகமாகும். 
 

மழைநீர் வடிகால் துறையில் பொதுவாக 90 சதவிகிதப் பணிகள் M-20 Grrade கான்கிரீட்டை பயன்படுத்தியே மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளது. RMC M-20 Grrade கான்கிரீட் M –Sand மூலப்பொருளாகக் கொண்டு செய்யப்படும் பணியின் விலை ரூ.7,686 / M3 ஆகும். இப்பணி ஆற்று மணல் கொண்டு மேற்கொள்ளும்போது பணியின் விலை ரூ.7,486/ M3 ஆகும். எனவே, ஆற்று மணல் கொண்டு செய்யும் பணியின் செலவு குறைவு ஆகும். M –Sandஐ கொண்டு செய்யும் பணியின் செலவு அதிகமாகும். எனவே, இதனால் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு எந்தவிதமான நிதி இழப்பும் ஏற்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
 

உதாரணமாக, மண்டலம் 4, வார்டு 46ல் உள்ள, Goods Shed சாலையில் 1200X1200mm அளவு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட பணியின் மதிப்பீட்டு தொகை ரூ.534 இலட்சமாகும் இதில் கான்கிரீட் பணிகள் (M20) தொகை ரூ.176 இலட்சமாகும் (32.90% ஆகும்). இதில் மதிப்பீட்டின்படி, ஆற்று மணல் பயன்படுத்த வேண்டியது 8.25% ஆகும். அதன் மதிப்பீட்டுத் தொகை ரூ.14.49 இலட்சமாகும். ஆனால், ஆற்று மணல் தடை மற்றும் கிடைக்காத காரணத்தினால், தமிழக அரசின் கொள்கை முறைப்படி M–Sand கொண்டு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் தொகை ரூ. 40.52 இலட்சமாகும். இதனால் M–Sand பயன்படுத்தும்போது ரூ.26.03 இலட்சம் கூடுதலாக செலவு ஏற்படுகிறது. ஆனால், ஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்படும் தொகை மதிப்பீட்டில் உள்ளது போன்றே குறைவான தொகையான ரூ.14.49 இலட்சமே ஆகும்.


 

 

மேலும், இணையதளத்தின் வாயிலாக தகவல் எடுக்கும்போது பல்வேறு நகரங்களில் M–Sandன் சந்தை விலை ஒரு கன மீட்டருக்கு ரூ.1130 முதல் ரூ.1943 வரை உள்ளது. பொதுப்பணித்துறை அளித்துள்ள விலை ரூ.1250 ஆகும். எனவே, வெளிச்சந்தை விலையும் பொதுப்பணித்துறை விலையும் ஒன்றாகவே உள்ளது. எனவே, M–Sandஐ பயன்படுத்தி பணிகளை மேற்கொண்டதினால் பெரு நகர சென்னை மாநகராட்சிக்கு எவ்வித நிதி இழப்பும் இல்லை.
 

மேலும், அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும்போது, பணிகளை 3ம் நபர் திட்ட மேலாண்மை கலந்தாளுநர் மூலமாக முழுமையாக ஆய்வு செய்து அவர்கள் M – Bookல் எழுத வேண்டிய அளவுகளையும் மற்றும் தொகையையும் குறிப்பிட்டு கொடுக்கிறார்கள். மேலும், இந்தப் பதிவுகள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள்/துறைகளின் பல்வேறு நிலைகளிலுள்ள பொறியாளர்கள் மூலமாக 100 சதவிகிதம் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு, M – Bookல் எழுதப்பட்டு, திட்ட மேலாண்மை கலந்தாளுநர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் பல்வேறு பொறியாளர்கள் மூலம் பதிவு செடீநுடீநுயப்பட்டு வருகிறது.
 

மேலும், இந்தப் பணிகளுக்காக நிதி வழங்கும் TNUIFSL நிறுவனம், மாநில தரக்கட்டுப்பாடு அலுவலர்களை எல்லா பணியிடங்களுக்கும் தவறாமல் அனுப்பி ஆய்வு செய்துள்ளது. உலக வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் பணிகளை இறுதியில் உலக வங்கியின் குழு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு தரத்தினை உறுதி செய்துள்ளது.
 

எனவே, தவறான, உண்மைக்குப் புறம்பான வகையில் செய்திகளைப் பரப்பி, மக்கள் மத்தியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுகாவின் அங்கமாக செயல்படும் ஒரு இயக்கத்தின் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயாமல் ஆளுங்கட்சியைத் தாக்க ஒரு ஆயுதம் கிடைத்துவிட்டது என்ற ஆர்வக் கோளாறு காரணமாக, அவசரக் குடுக்கையாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


 

 

மேலும் கடந்த 3 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை எத்துணை? என்று கேட்கிறார் ஸ்டாலின். தவறு செய்பவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அவ்வப்பொழுது நடவடிக்கை எடுத்து வருகின்றது. நடக்காத ஊழலுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை விஜிலென்ஸ் அறிக்கை போடவில்லை எனக் கேட்பது சிறுபிள்ளைத் தனம்.
 

உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் குறை சொல்லி, மிரட்டிப் பார்ப்பதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.
 

ஆயிரம் கைகள் தடுத்து நின்றாலும். முழு நிலவின் குளிர் ஒளியை தடுத்துவிட முடியாது. ஆயிரம் பொய்களை ஸ்டாலின் அடுத்தடுத்து சொன்னாலும் மக்கள் மத்தியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை களங்கப்படுத்தி விடமுடியாது. எதிர் வரவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒருக்காலும் திமுக வெற்றி பெற முடியாது.
 

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளைக் கூறாமல் தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும். அப்படி ஆதாரம் இருக்கும் என்று நம்பினால், இன்றே என் பதவியினை முழுமனதுடன் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். இன்றே மு.க.ஸ்டாலினும் ராஜினாமா செய்ய வேண்டும். நிரூபிக்க ஸ்டாலினால் முடியவில்லை என்றால், அவர் திமுக தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவிகளை துறந்துவிட்டு அரசியலை விட்டே அவர் ஒதுங்கிப் போக வேண்டும். நிரூபித்தால், நான் ஜெயலலிதா வழங்கிய கழக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகிய பதவிகளை துறந்து, அரசியலை விட்டே விலகத் தயார். இவ்வாறு கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.