Advertisment

'விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாகவே இருக்கிறார்; வேதனை அளிக்கிறது'-இபிஎஸ் பேச்சு 

admk

'ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு கார் பந்தயம் நடத்த வேண்டுமா?' என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisment

சேலத்தில் நடைபெற்ற அதிமுககட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''ஏழை மக்களின் வரிப்பணத்தில் கார் பந்தயம் தேவையா? பந்தயம் நடத்த வேண்டும் என்ற தேவை இருந்தால் இதற்காகவே ஏற்கனவே ஜெயலலிதா இருங்காட்டுக்கோட்டை சோழவரம் பகுதியில் பிரம்மாண்டமான கார் பந்தயம் நடத்துவதற்காகவே ஒரு மைதானம் அமைத்துக் கொடுத்துள்ளார். அங்கு போய் கார் பந்தயம் நடத்தலாம். அதை விட்டுவிட்டு ஏழை மக்களுடைய வரிப்பணத்தில் சுமார் 42 கோடி செலவில் நகரத்தினுடைய மையப் பகுதியில் கார் ரேஸ் நடத்துவேன் என்கிறார்கள்.

Advertisment

அந்த பகுதியில் மருத்துவமனை இருக்கிறது; ரயில் நிலையம் உள்ளது; தலைமைச் செயலகம் இருக்கிறது; துறைமுகம் இருக்கின்றது. இப்படி போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்தப் பகுதியில் கார் பந்தயம் நடத்த வேண்டுமாம். அது அவசியமா? இன்னும் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் நிறைய இருக்கிறது. அதற்கு இந்த பணத்தை பயன்படுத்தலாம். அதை விட்டுவிட்டு கார் பந்தயம் நடத்துவதற்கு இன்றைக்கு திமுகவின் உடைய விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாக இதை செய்து கொண்டிருக்கிறார். இது வேதனை அளிக்கின்றது'' என்றார்.

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe