'' SP Velumani is sure to go to jail '' - Udayanithi Stalin's speech!

''அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறை செல்வது உறுதி'' என திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி இருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரை பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக பத்து நாட்களுக்கு மேலாக போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறை செல்வது உறுதி. கோவையில் தோல்வி ஏற்பட நம்மிடையே ஒற்றுமை இல்லாததுதான் காரணம். கட்சிக்கு எதிராக வேலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனக்கு பதவி ஆசை இல்லை'' என பேசினார்.

Advertisment