S.P. Velumani participates with Mohan Bhagwat at RSS festival

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் மோகன் பகவத் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் ஆதீன மடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய நூற்றாண்டு விழா இன்று (23-06-25) நடைபெறுகிறது. அந்த விழாவோடும் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாருடைய நூற்றாண்டு விழாவும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. இந்த இரண்டு விழாக்களை முன்னிட்டு பாரம்பரிய சிவ வேள்வி பூஜை இன்று நடத்தப்படுகிறது.

Advertisment

இந்த விழாவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய தலைவர் மோகன் பகவத் பங்கேற்றுள்ளார். அவருடன், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நேற்று (22-06-25) மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே பெரியார், அண்ணா குறித்து சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒளிப்பரப்பட்டது. இது சர்ச்சையாகியுள்ள நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பங்கேற்றிருப்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது.