dddd

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் அறிவித்துள்ளார்.

Advertisment

'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு துயரம் தருகிறது என திமுக எம்.பி. தயாநிதிமாறன் கூறியுள்ளார்.

Advertisment

தயாநிதி மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில், ''தனது இனிய குரலால் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி திரையிசையுலகில் பெரும்புகழ் பெற்ற 'பாடும் நிலா' திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு துயரம் தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.