எல்லாக் கட்சிகளும் பரபரப்பா இருக்கிற நிலையில், காங்கிரஸ் சைடில் வழக்கம் போலவே சலசலப்பு தெரிவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிவருகின்றனர். இது பற்றி விசாரித்த போது, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான கே.எஸ். அழகிரி, கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழுவிற்கு 11 உறுப்பினர்களை அண்மையில் நியமித்துள்ளார். இவர்களில் பலர் மீது காங்கிரஸ் சொத்துக்களை அபகரித்து வைத்துள்ளனர் என்ற புகாரும், வேறு சில கிரிமினல் புகார்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisment

congress

இதுபற்றி டெல்லித் தலைமைக்கு இங்கிருக்கும் காங்கிரஸ் பிரமுகர்களிடமிருந்து ஏகத்துக்கும் புகார்கள் சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து சோனியாவால் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு பிரமுகர், 8-ந் தேதி தமிழகம் வந்து கே.எஸ்.அழகிரியிடம் விசாரித்துவிட்டு சென்றுள்ளதாக கூறுகின்றனர்.