Skip to main content

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஓட்டுக்கு ரூ. 5,000 பட்டுவாடா, வீடியோ ஆதாரத்துடன் புகார்...!

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

தேனி பாராளுமன்ற வேட்பாளர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன்  ரவீந்திரநாத் குமார் ஓட்டுக்கு ரூ. 5000 வரை உசிலம்பட்டியில் பட்டுவாடா செய்த வீடியோ ஆதாரத்துடன் ஆட்சியரிடம் புகார்.

 

ops


நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 18-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் நாளை மாலையுடன் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களும் முடிகின்றது. ஏற்கனவே பல இடங்களில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்துவருவதாக தகவல்கள் வருகின்றது. அதேசமயம் பணப்பட்டுவாடாவை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் ஆவணங்கள் இன்றி பணம் பறிமுதல் செய்யப்பட்ட இடத்தில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு வாக்களிக்குமாறு பணப்பட்டுவாடா நடக்கும் காணொலிக் காட்சி வெளியாகியுள்ளது. 
 

தேனி பாராளுமன்ற வேட்பாளர் ஓ.பி.எஸ் மகன்  ரவீந்திரநாத் குமார் ஓட்டுக்கு ரூ. 5000 வரை உசிலம்பட்டியில் பட்டுவாடா செய்யபட்டுள்ளது. அதை கையும் களவுமாக வீடியோ ஆதாரத்துடன் மதுரை ஆட்சியரிடம் பார்வர்டு பிளாக் பொருப்பாளர் கனேசன் புகாராக கொடுத்துள்ளார். மேலும் அவர் தெரிவித்தாவது, “ஆர்த்தி எடுப்பவர்களுக்கு தட்டுகளில் ரூ. 500, ரூ. 1,000 என வழங்கப்படுகிறது இவை அனைத்தும் காவல்துறையின் உதவியுடன் நடந்துகொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். அதேசமயம் ரவீந்திரநாத் குமாரை உடனடியாக தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓபிஎஸ், ஓபிஆர் மீதான வழக்குகள் ரத்து

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

Cancellation of cases against OPS, OPR

 

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓபிஆர் மீதான வழக்குகளைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

 

2021 சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வமும், 2019 மக்களவைத் தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத்தும் தவறான தகவல்களை வேட்புமனுவில் தெரிவித்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. மிலானி என்பவர் அளித்த புகாரில் வழக்கைப் பதிவு செய்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பும், அவரது மகன் தரப்பும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

 

அந்த மனுக்கள் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிமன்றத்தில் ஓபிஎஸ், ஓபிஆர் தரப்பில், 'எதிர் மனுதாரர் (பிரைவேட் கம்பெனி) தனியாளாகப் புகார் மட்டும் அளித்திருக்கிறார். அதற்காக இருக்கக்கூடிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை. தேர்தல் வேட்புமனுவில் உண்மையான தகவல்கள் கொடுக்கப்பட்டதால்தான் வேட்புமனு ஏற்கப்பட்டது. இல்லையென்றால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்கும். எனவே அதனடிப்படையில் இந்த மனுவைத்  தள்ளுபடி செய்ய வேண்டும்' என்ற வாதம் வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'புகார் மனுவிற்கு ஆதாரங்கள் இல்லாத மனுவை ஏற்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால், அதனை ஏற்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ரவீந்திரநாத்துக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்ட வழக்குகளை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

 

 

Next Story

ஓ.பி.எஸ் மகன் எம்.பி. ரவீந்திரநாத்தை கைது செய்ய கோரி போராட்டம்!

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

Teni People demand to arrest OPS son   Rabindranath M.P.

 

பெரியகுளம் அருகே உள்ள சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் ஓ.பி.எஸ் மகனான எம்.பி. ரவீந்திரநாத்க்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தின் சோலார் மின்வெளியில் சிக்கி சிறுத்தை ஒன்று சில தினங்களுக்கு முன்பு உயிர் இழந்தது. இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. சம்பவம் தொடர்பாக வனத்துறை அலுவலர்கள், ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கடுமையாக தாக்கி அவரை கைது செய்துள்ளனர். மேலும் ரவீந்திரநாத் தோட்டத்தில் பணியாற்றும் மேலாளர்களான ராஜவேல், தங்கவேல் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். 

 

இந்த நிலையில், வனத்துறையினர் தோட்டத்தின் உரிமையாளரான ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவரின் தோட்ட தொழிலாளர்களை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பவர்கள் சங்கத்தின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர்  தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், ஆட்டுக்கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கூறியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Teni People demand to arrest OPS son  Rabindranath M.P.

 

இது சம்பந்தமாக பத்திரிகையாளர்களிடம் வழக்கறிஞர் சரவணன் பேசும்போது, “வனத் துறையினர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அலெக்ஸ் பாண்டியன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட தோட்டத்தின் உரிமையாளரான ஓ.பி.எஸ் மகன் எம்.பி. ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். பொய் வழக்கு போட்ட வனத்துறை அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.