தன்னைப் பற்றி இறக்கை கட்டி பறந்த செய்திக்கு சசிகலாவின் ரியாக்ஷன் என்னவாம்?''’ என்று விசாரித்த போது யார் கிளப்பிவிட்ட வேலைடா இதுன்னு சிறையில் வடிவேலு பாணியில் சசிகலா கொந்தளிக்க ஆரம்பிச்சிட்டாராம். காரணம், இந்தத் தகவல் பரவியதால், கர்நாடக சிறைத்துறை சசிகலாவிடம் அதிக கெடுபிடி காட்ட ஆரம்பிச்சிடுச்சாம். சசிகலா அப்செட் ஆனதை அறிந்த அவங்க ரிலேட்டிவ் தரப்பு, தி.மு.க.காரங்கதான் வேணும்னே தேவையில்லாம இப்படி வதந்தியக் கிளப்பி, இம்சை கொடுக்குறாங்க.
இதையெல்லாம் நீங்க காதில் வாங்கிக்காதீங்கன்னு சசிகலாவை சமாதானப்படுத்தியிருக்காங்க. உள்ளுக்குள்ளேயே யாரோ கிளப்பிவிட்டிருக்காங்கிற டவுட்டில்தான் சசி இருக்காராம். அதே நேரத்தில், எப்படியாவது விடுதலை ஆகிவிட வேண்டும் என்ற ஆசையும் மனதின் ஓரத்தில் இருக்கிறதாம்.''’