சசிகலாவுடன் பேசிய மேலும் சிலர் அதிமுகவிலிருந்து நீக்கம்!

Some more who spoke to Sasikala fired from AIADMK!

அதிமுகவைக் கைப்பற்றப் போவதாக தொடர்ந்து சசிகலா ஆடியோ வெளியிட்டுவரும் நிலையில், அவருடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். இதற்கான தீர்மானம் கடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மாவட்டம் வாரியாக அதிமுக மாவட்டக் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவந்தன. அதனைத் தொடர்ந்தும் சசிகலா தொண்டர்களுடன் பேசுவது தொடர்பான ஆடியோக்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், சசிகலாவிடம் ஃபோனில் பேசிய மேலும் ஐந்து நிர்வாகிகளை அதிமுகவிலிருந்து நீக்கஅதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்-இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ணன் சிவகங்கையைச் சேர்ந்த ஆர். சரவணன், ஆர். சண்முகப்பிரியா, நெல்லையைச் சேர்ந்த திம்மராஜபுரம் ராஜகோபால், டி. சுந்தர்ராஜ் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

admk ops_eps sasikala
இதையும் படியுங்கள்
Subscribe