மக்கள் நீதி மய்யம் சார்பில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கவிஞர் சினேகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய செல்கிறார்.

Advertisment

snekan

சிவகங்கை செல்லும் வழியில் புதுக்கோட்டையில் அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கமல்சுதாகர் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் ஆறுமுகம், அரவிந்தன், முத்துச்செல்வம் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் அவரை வரவேற்றனர்.

தொடர்ந்து திருமயம் கோட்டையில் அமைந்துள்ள கோட்டை (கால) பைரவர் கோயிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அப்போது சினேகனுக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு வழிபாடு செய்த குருக்கல் வெற்றி பெறவும் வாழ்த்தி அனுப்பினார்.