ADVERTISEMENT

ஆறுமுகச்சாமி விசாரணை கமிசன் திருப்தி இல்லை: ஜெ.தீபா

12:39 AM Feb 19, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரில் எம்.ஜி.ஆர்., அம்மா ’ஜெ’ தீபா பேரவை, சார்பில் இன்று மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைச் செய்து சிறப்புரையாற்றினார் தீபா. மாலை 5 மணி என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், தீபா வந்ததோ மூன்றரை மணி நேரம் தாமதமாக இரவு 8.54க்குத் தான் வந்தார். நிகழ்ச்சியைக் களைகட்ட வைக்க ஜெ, ’ஜெ’ குழு சார்பில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி.

ADVERTISEMENT

சுமார் பத்து நிமிடங்களே பேசிய தீபாவின் பேச்சில் காரம் தெறித்தது.

அ.தி.மு.க.வைத் தோற்றுவித்த புரட்சித் தலைவர் அம்மாவைத் தன் அரசியல் வாரிசாக அறிவித்தார். அம்மா நோய் வாய்ப்படுகிற கடைசி நாள் வரை மக்களுக்காகவே உழைத்தவர் அப்படிப்பட்ட அம்மாவை சில கயவர்கள் சூழ்ந்து கொண்டு இந்தக் கதிக்கு ஆளாக்கி விட்டார்கள். அதற்கு மக்கள் நீதி நியாயம் கேட்க வேண்டும். நான் உங்களுக்காக அம்மா விட்டுச் சென்ற பணியினை எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பின் வாங்காமல் செய்து முடிப்பேன். ஆஸ்பத்திரியில் தனித்து தவிக்கவிடப்பட்ட அம்மாவை, இந்தக் கதிக்கு ஆளாக்கியவர்களை மன்னிக்கக் கூடாது. என்னைக் கூடப் பார்க்க விடாமல் காவல்துறையைக் கொண்டு ஒட ஒட விரட்டினார்கள். இதை எல்லாம் எண்ணிப் பார்த்துத் தான் நான் அரசியலுக்கு வந்தேன். அம்மா பெண்களுக்காகக் கொண்டு வந்த உயர் கல்வித் திட்டம், தொட்டில் திட்டம் போன்றவைகளை இந்த அரசு செயல்படுத்தவில்லை. மக்களை ஏமாற்றுகிறார்கள். இது அம்மா அரசல்ல. அகற்றப்பட வேண்டியது. அம்மா இடத்திற்கு வேறுயாரும் வரக் கூடாது ஆனால் சிலர் மக்களுக்குப் பணம் கொடுத்து வரத்துடிக்கிறார்கள். அதை அனுமதிக்கக் கூடாது. புரட்சித் தலைவியின் வரலாற்றில் என் பெயரை இடம் பெறச் செய்வேன். ஆறுமுகச்சாமி விசாரணை கமிசன் திருப்தி இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் யாருக்காவது ஆதரவு கொடுப்பேன். தனித்து போட்டியிட மாட்டேன் என்று பேசினார். பின்னர் நலத்திட்டங்களை வழங்கினார்.


- ப.இராம்குமார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT