“பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்” - சீதாராம் யெச்சூரி

Sitaram Yechury meets Chief Minister Stalin

பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுவோம் என முதல்வருடனான சந்திப்பிற்கு பிறகு சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்து பேசினார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீதாராம் யெச்சூரி, “கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் விவாதித்தேன். பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படத்தயாராக உள்ள அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம். இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெறும்” என்றார்.

இதையும் படியுங்கள்
Subscribe