single leadership eps consulting video leaked

Advertisment

வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நிலையில், அதிமுக வட்டாரத்தில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நிலையில், பொதுக்குழுவை நடத்தும் முடிவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியினருடன் எடப்பாடி பழனிசாமி பேசும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்தக் காணொளியில், அதிமுக பலம் பொருந்திய கட்சி. அதை எந்தக் காலத்திலும் வீழ்த்த முடியாது. கழகத்தை பலவீனப்படுத்த சிலர் முயற்சி செய்கின்றனர். அதை தகவல் தொழில்நுட்ப பிரிவினர் முறியடிக்க வேண்டும். அதிமுக எதிர்காலத்தில் பலம்பொருந்திய கட்சியாக உருவெடுக்க உங்களின் பங்கு மிக முக்கியம். அதை முறையாகச் செய்யுங்கள்” எனத் தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.