தீர்ப்பளித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தாரமையா தெரிவித்துள்ளார்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த மே 12ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 78 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. பெரும்பாலான தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியுற்றனர்.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி மற்றும் படாமி தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் படாமி தொகுதியில் அவர் வெற்றிபெற, சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
Dear Brothers & Sisters of Karnataka,
I thank you for your verdict.
It has been an honour to serve you as Chief Minister for the past 5 years.
I am confident the Congress Party & the new Government we form, will continue to work for the best interests of our state & our people
— Siddaramaiah (@siddaramaiah) May 16, 2018
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கர்நாடகத்தைச் சேர்ந்த அன்புள்ள சகோதர, சகோதரிகளே.. நீங்கள் அளித்த தீர்ப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஐந்தாண்டுகளாக உங்களுக்கு முதலமைச்சராக பணியாற்றியதில் நான் பெருமைகொள்கிறேன். இனி வரும் காலங்களிலும் நம் மாநிலம் மற்றும் அதன் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றாற்போல் காங்கிரஸ் மற்றும் அடுத்து அதன்சார்பில் அமையவிருக்கு ஆட்சி நடைபெறும் என்பதை உறுதியளிக்கிறேன்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.