Advertisment

எஸ்.ஐ. தேர்விலும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு?

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வுக்கான அறிவிப்பு 2019 மார்ச் மாதம் வெளியிட்டு ஜனவரி 12,13 தேதிகளில் 32 மாவட்டங்களில் நடைபெற்றது.அதில் முதல்கட்டமாக நடைபெற்ற பொதுப் பிரிவுக்கான தேர்வு மிகவும் கடினமாக இருந்த நிலையில் 13ம் தேதி காவலர் துறையினர்களுக்கான 20 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான தேர்வு நடைபெற்றது.இதில் அனைத்து வகையான முறைகேடுகள் அரங்கேறியுள்ளது.

Advertisment

 Employee -

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

12ம் தேதி எஸ்.ஐ பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கைக் கடிகாரம் , கைப் பேசி, எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட எந்தப் பொருட்களும் உள்ளே அனுமதிக்கவில்லை, நீட் தேர்வுக்கு செய்த விதிமுறைகளைப் போலவே இருந்துள்ளது.

சென்னை மதுரவாயல் உள்ள கல்லூரி ஒன்றில் 13ம் தேதி நடைபெற்ற காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத்தேர்வை எழுதிய பிறகு காவலர் ஒருவர் தங்களுடைய காவலர் வாட்ஸ்அப் குருப்பில் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததைத் தங்களின் மனதில் உள்ளதை கொட்டித் தீர்த்துள்ளார். இந்தத் தேர்வை எழுதிய இன்னோறு நபர் இரண்டு நாள் கழித்து இது தொடர்பாக வழக்கு தொடுப்பேன், எல்லோருமே பார்த்துதான் எழுதினாங்க என்று சொல்ல,அதற்கு இன்னோரு காவலர் இப்படி பேசியுள்ளார்.

“இவ்வளவு பேசரயே மச்சி, டிப்பார்ட்மண்ட் கோட்டா தேர்வு மதுரவாயல் காலேஜில் எழுதிட்டு, பொதுத் தேர்வில் வரவில்லை என்றாலும் டிப்பார்ட்மெண்ட் கோட்டா போயிடுவேன் என்று சொல்லி நீ மதுரவாயில் பிரிஜ்மேல ஆட்டம் போட்டுட்டு போன நீயூஸ்யெல்லாம் எனக்கு எப்போ வந்திடுச்சி, இப்போ வந்து இரண்டு நாள் கழிச்சி கூவர, யா கீ லிஸ்ட்டில் பார்த்தட்டியா அதுலயும் மார்க் வராதா, அதனாலதான் இரண்டு நாள் கழித்து ஆடரயோ,

உங்க டீம் ஆளுங்க எல்லோரும் டிப்பார்ட்மண்ட் கோட்டா எழுதிட்டு ஆட்டம் போட்டுட்டு இப்போ வந்து கேஸ்ப்போடுவேன் அதைப் பண்ணுவேன் இதைப் பண்ணுவேன் என்று சொல்லுர, என்ன நீ எழுதன எல்லாத்தையுமே வீடியோ எடுத்து வச்சிருக்கியா? அப்படி இருந்தாலும் நீயும் தான் என்னைப்பார்த்து எழுதன என்று அவன் சொன்னா நீயும் தான் மாட்டுவாய், நீ டிப்பார்மண்ட் மேல கேஸ் போட்டு எதிர்த்து வெற்றிபெறுவது கஸ்ட்டம் அப்படியே போட்டாலும்மொத்த தேர்வயுமே நிறுத்தவேண்டிய சூழ்நிலை வந்தும் பார்த்துக்கோ, அதனால மூடிட்டு அடுத்த தேர்வு வந்தா எழுதிட்டு போ இது காலம் காலமாக நடப்பதுதான்” என்றார்.

இது தொடர்பாக பேசிய தேர்வு ஆணையம் டி.ஜி.பி கரன்சிங்காவிடம் கேட்டபோது இது போன்ற தவறுகள் நிச்சியம் நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை நாங்கள் தெளிவாகத் தான் நடத்தியுள்ளோம் மேலும் இது போன்ற தகவல் இருந்தால் அந்த நிர்வாகிகள் மீதும் அதன் தொடர்பானவர்கள் மீதும் நிச்சியம் நடவடிக்கை பாயும் என்றார்.

employees exam Tamil Nadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe