Skip to main content

ஆட்டுத்தோல் வியாபாரி செய்யாதுரையின் அசுர வளர்ச்சி!

Published on 16/07/2018 | Edited on 16/07/2018
spk

 

 

ஆட்டுத்தோல் வியாபாரம் செய்து வந்த  செய்யாதுரை, அமைச்சர்களின் ஆதரவுக்கரம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் மூலம் தனது எஸ்.பி.கே. நிறுவனம் பல ஆயிரம் கோடி வர்த்தகம் செய்யும் அளவிற்கு குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழமுடி மண்ணார்கோட்டை கிராமத்தில் பிறந்தவர் செய்யாதுரை.  ஆரம்பகாலகட்டத்தில் ஆட்டுத்தோல் விற்பனையில் ஈடுபட்டு வந்த இவர், பின்னர் சாலை சீரமைப்பு உள்ளிட்ட சிறு வேலைகளை டெண்டர் எடுத்து செய்து வந்தார்.   கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டபோது  அதன் சாலைப்பணிகளை செய்து அதன் மூலம் அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார் செய்யாதுரை. இந்த தொடர்புகளின் மூலம் தொடர்ந்து சாலைப்பணிகளுக்கான டெண்டர்களை எடுக்கத்தொடங்கினார்.   அப்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்ஸின்  ஆதரவு அவரது மகன்கள் மூலம் கிடைத்தது. இதன்பின்னர் செய்யாதுரைக்கு ஏறுமுகம்தான்.   மாநில நெடுஞ்சாலையில் எந்தப்பணிகளூம் இவரது நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனமும் செய்ய முடியாது என்ற நிலை வந்தது.   மதுரையில் ஐந்து நட்சத்திர ஓட்டல், சாலை வசதிக்கு தேவையான ஜேசிபி உள்ளிட்ட தளவாடங்களை சொந்தமாக வாங்கி குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றார் செய்யாதுரை.  தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா வரை தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது எஸ்.பி.கே. நிறுவனம்.

 

செய்யாதுரையின் கண் அசைவில்தான் தமிழக நெடுஞ்சாலைத்துறை இயங்கியது.   10 ஆண்டுகளுக்கு முன் 5 கோடி வர்த்தகம் செய்து வந்த எஸ்பிகே கன்ஸ்ட்ரக்‌ஷன் தற்போது ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.   

 

நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிப்பு பணிகளில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மட்டும் 1,074 கோடி டெண்டர் மற்றும் பராமரிப்பு பணிகளை எஸ்.பி.கே. நிறுவனம் எடுத்துள்ளது.   நெடுஞ்சாலைத்துறையின் 5 ஆயிரம் கோடி ஒப்பந்தங்கள் எஸ்.பி.கேவிடம் உள்ளன.  

 

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் விடப்பட்டதில் ஏராளமான முறைகேடுகள், வரி ஏய்ப்பு ஆதாரங்கள் வருமான வரித்துறைக்கு கிடைத்துள்ளன.   அதன் அடிப்படையில் இன்று செய்யாதுரை மற்றும் அவருக்கு நெருக்கமான 30 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.   செய்யாதுரையின் கூட்டாளிகள் வீடுகளில் இருந்து மூட்டை மூட்டையாக புத்தம் புதிய 2 ஆயிரம் நோட்டுகளாக 120 கோடி சிக்கியுள்ளன.  பெட்டி பெட்டியாக 100 கிலோ தங்கம் சிக்கியுள்ளன.  தொடர்ந்து நடைபெற்று வரும் ரெய்டில் ஏராளமான பணம், தங்கம், ஆவணங்கள் சிக்கும் என்ற அதிரவைக்கிறது தகவல்.

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“திருமாவளவனின் வெற்றியைத் தடுக்க தேர்தல் அலுவலகத்தில் சோதனை” - விசிக குற்றச்சாட்டு

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Vck allegations Raiding election office to prevent Thirumavalavan victory

சிதம்பரம் புறவழிச்சாலை அருகே நடேசன் நகரில் கட்சியின் நிர்வாகி முருகானந்தன் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் பிரச்சாரம் முடிந்து இரவு நேரங்களில் தங்குகிறார். இந்த வீடு தேர்தல் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (9.10.2024) மாலை 7 மணியிலிருந்து எட்டு மணி வரை 7 பேர் கொண்ட குழுவினர் வருமான வரித்துறை என்றும் சரியான பதில் கூறாமல் தொல். திருமாவளவன் தங்கி இருக்கும் அறை மற்றும் அந்த வீடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனையில் பணம் உள்ளிட்ட எதுவும் இல்லை.  இது குறித்து அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் தாங்கள் சோதனை செய்தது குறித்தும் இங்கு எதுவும் இல்லை என கடிதமாக கொடுங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் கொடுக்கிறேன் என மழுப்பலாக சென்றுள்ளனர்.

vck

இதுகுறித்து சோதனையின் போது உடன் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கௌதம் சன்னா செய்தியாளர்களிடம் கூறுகையில், “திடீரென ஏழு பேர் கொண்ட குழுவினர் தலைவர் தங்கி இருந்த வீட்டிற்குள் வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது அறை உள்ளிட்ட வீட்டிலிருந்த அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். வழக்கமாக தேர்தல் அலுவலகங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்வது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது வருமானவரித்துறையினர் திருமாவளவனின் வெற்றியை அச்சுறுத்தும் வகையில் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் அலுவலகத்தில் சோதனை செய்தது தலைவரை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாகவும் உள்ளது.  இதனால், அவரது வெற்றியைத் தடுக்க முடியாது” எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், விவசாய அணி மாநில நிர்வாகி முருகானந்தம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்