Skip to main content

ஏழு பேர் விடுதலை! எடப்பாடியின் அடேங்கப்பா... அரசியல் !

Published on 07/09/2018 | Edited on 07/09/2018


 

edappadi palanisamy



ராஜுவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும், அவர்களின் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
 

இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், "ஏழு பேர் விடுதலையை விரும்பியவர் ஜெயலலிதா. அதனால், அவரது கனவை நிறைவேற்றும் வகையில் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றலாம். கேபினெட்டை கூட்டுங்கள்" என வலியுறுத்தியுள்ளார் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். 

 

supreme-cour


மூத்த அமைச்சர்கள் பலரும் இதே கருத்தை முதல்வரிடம் வலியுறுத்தி வரும் நிலையில், "தீர்ப்பின் நகல் வரட்டும். அதனை முழுமையாக ஆராய்ந்தப் பிறகு முடிவெடுக்கலாம்" என்று தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. 
 

இதற்கிடையே, ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநர் பன்வாரிலாலிடம் பரிந்துரைக்கும் பட்சத்தில், அந்த பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமா? அமைச்சரவையின் முடிவை அவர் நிராகரிக்க வாய்ப்பிருக்கிறதே?  என்கிற கேள்விகள் தமிழக அரசியலில் எதிரொலிக்கவே செய்கின்றன.

இதுகுறித்து, சட்டவல்லுநர்களிடம் நாம் விசாரித்தபோது, "அமைச்சரவையின் முடிவை ஏற்காமல் அரசுக்கே திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், திருப்பி அனுப்பட்ட பரிந்துரையை தமிழக அரசு ஏற்காமல், மீண்டும் அமைச்சரவையைக் கூட்டி மீண்டும் தீர்மாணம் நிறைவேற்றி ஆளுநருக்கு அரசு பரிந்துரைத்தால், அதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டு முடிவெடுக்க வேண்டும். ஆக, அரசின் பரிந்துரையை ஒரு முறை தான் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு" என்கின்றனர். 
 

இந்த நிலையில், அமைச்சரவையை கூட்டி விவாதிப்பதற்கு முன்பு  முதல்வர் எடப்பாடியிடம் வேறு சில திட்டமிடல்கள்  இருப்பதாக தகவல் பரவி வருகின்றன. இது குறித்து விசாரித்தபோது, "தமிழக அரசும் ஆளுநரும் இதில் முடிவெடுக்கலாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மையமாக வைத்து அமைச்சரவையைக் கூட்டி நாம் முடிவெடுத்ததாக இருக்கக் கூடாது. 

 

edappadi

இதற்கு மாறாக, ஏழு பேரின் குடும்பத்தினரும் தம்மை சந்தித்து அவர்கள் கோரிக்கை வைக்கட்டும். அவர்களின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் இதில் நல்ல முடிவை எடுப்போம். அதாவது, நீதிமன்றத்தின் உத்தரவுக்காக மட்டுமே முடிவு எடுக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பத்திற்காகவும், ஏழு பேரின் குடும்பத்தின் கண்ணீரை துடைப்பதற்காகவுமே நல்ல முடிவை எடுத்தோம் என்கிற தோற்றம் வரவேண்டும் என முதல்வர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. 

 

அதற்கேற்ப,  ஏழு பேரின் குடும்பமும் முதல்வரை சந்திக்க நேரம் கேட்க வைப்பது எனவும், அதன்படி அவர்களை சந்தித்துப் பேசவும் ஆலோசிக்கிறது முதல்வர் தரப்பு. ஆனால், தமிழுணர்வு மிக்க மூத்த அமைச்சர்கள் சிலர், இதில் அரசியல் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர் " என கோட்டையிலுள்ள அதிகாரிகள் தரப்பில் எதிரொலிக்கின்றன.
 

இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 9ந் தேதி ஞாயிற்றுக்கிழமை கூடுகிறது என தகவல் வெளியாகி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.