மேச்சேரியில் தொடர் கொள்ளை... அச்சத்தில் மக்கள்!

 Series of robberies in Mecheri... people in fear!

மேச்சேரியில்தொடர்ச்சியாக மூன்று இடங்களில் நிகழ்ந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் மக்களிடம் பயத்தை உண்டாகியுள்ளது.

சேலம் மாவட்டம்மேச்சேரிஒர்க்ஷாப்காலனியைசேர்ந்தவர் மோகனப்ரியா. இவரது வீட்டில் நுழைந்த நபர் ஒருவர் மோகனப்ரியாஅணிந்திருந்த தங்கசங்கலியைமிரட்டிபறித்துச் சென்றுள்ளார். அதேபோல்மேச்சேரியில்உள்ள அமரத்தான்பகுதியைசேர்ந்த ரவிக்குமார் என்பவர் குடும்பத்துடன் இரவில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த சிலர் அவரதுவீட்டில் இருந்த5,000 ரூபாய்பணத்தைதிருடிச் சென்றுள்ளனர். அதேபோல்மேச்சேரியைசேர்ந்த ராஜா என்பவர் வீட்டிலும் கொள்ளையடிக்க முயற்சி நடந்த நிலையில் இதுதொடர்பாககாவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்துமேச்சேரிகாவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசார்ஒருபுறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தாலும், இந்த தொடர் கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

mecheri police Salem
இதையும் படியுங்கள்
Subscribe