Separately campaigning O.P.S. & EPS!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி சார்ந்த வேட்பாளர்களுக்கு அவர்களின் கட்சி தலைவர்கள் ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தனித்தனியாக அவர்கள் பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, இன்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சிவகாசியிலும், ஓ.பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்திலும் தங்களது பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர்கள் திருச்சியிலும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

Advertisment

அதன்படி திருச்சியில் போட்டியிடும் அதிமுகவினரை ஆதரித்து 11ஆம் தேதி பன்னீர்செல்வமும், 15ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியும் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இதில் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாநகராட்சியில் பிரச்சாரம் செய்து தனது பிரச்சார பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.