separate resolution in the assembly to immediately implement the Setu Samudra project

2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர்,ஆளுநர் ரவி உரையுடன் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத் தொடரில் ஆளுநர் படிக்கும்போது, தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட வரிகளைப் புறக்கணித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் பேச்சுகள் அவைக் குறிப்பில் இடம்பெறக்கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமடைந்த ஆளுநர், சட்டமன்றத்திலிருந்து வெளியேறினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

Advertisment

இந்நிலையில், கூட்டத் தொடரில் நான்காவது நாளான இன்று, மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவரவிருக்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேது சமுத்திர திட்டம் உகந்ததாக இருக்கும். அதனால் இந்தத்திட்டத்தை இனியும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றவேண்டும் என்று முதல்வர் இந்தத்திட்டத்தை முன்மொழியவிருக்கிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர்மன்மோகன் சிங்கால் இந்தத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment