Advertisment

“நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி” - மாயாவதி அதிரடி 

Separate competition in parliamentary elections Mayawati in action

நாடாளுமன்றத்தேர்தலில் பகுஜன் சாமஜ்வாதி கட்சி தனித்துப் போட்டியிடும் என மாயாவதி தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில், பகுஜன் சமாஜ்வாதி கட்சித்தலைவர் மாயாவதி மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் அரியானா உள்ளிட்ட சட்டப்பேரவைத்தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளார். மேலும் நாடாளுமனறத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும். தேசிய அளவில் அமைந்துள்ள இரு கூட்டணிகளையும் சமமாகத்தான் கருதுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

MAYAVATI
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe