Advertisment

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் என்னுடன் வரலாம்: நண்பர்களிடம் செந்தில்பாலாஜி...

Senthil Balaji

Advertisment

அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி திமுகவில் இணைகிறார் என நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டோம். இந்த நிலையில் செய்தில்பலாஜி தனது நெருங்கிய நண்பர்களுடன் பேசிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில்கரூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் நண்பர்களிடம் பேசும்போது, தி.மு.க.வில் சேர்ந்து விடலாம் என்று மனம் விரும்பியது. அதற்கு ஏற்றாற்போல தி.மு.க.வில் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. தி.மு.க.வில் என்னை இணைத்து கொள்ளப்போகிறேன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் என்னுடன் வரலாம் என கூறியுள்ளார்.

மேலும் முக்கியமான ஆதரவாளர்களுடன் சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்துவிட்டு, பின்னர் கரூரில் இணைப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

join karur senthil balaji
இதையும் படியுங்கள்
Subscribe