senthil balaji - stalin

அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைவார் என நக்கீரன் இணையதளத்தில்தான் முதலில் செய்தி வெளியிட்டோம். அதன்டி இன்று அண்ணா அறிவாலயத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த செந்தில்பாலாஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Advertisment

அப்போது, ஸ்டாலினிடம் பேசிய செந்தில் பாலாஜி, மேலும் மூன்று தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை அழைத்து வருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அதன்படி மூன்று எம்எல்ஏக்களிடம் செந்தில் பாலாஜி முதல் கட்டமாக பேசி வருகிறார்.

Advertisment

அதில், இரண்டு எம்எல்ஏக்கள் வருவது உறுதி செய்யப்பட்டதால் செந்தில் பாலாஜி ஆலோசனையின் பேரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசி வருகிறார். அந்த இருவரில் ஒரு எம்எல்ஏ உடனடியாக இணைவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் தினகரன் கூடாரம் காலியாகிக் கொண்டிருக்கிறது என அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.