செந்தில் பாலாஜ அரசியல்வாதி அல்ல. செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணைந்தார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம், அந்தியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
செந்தில் பாலாஜி ஒரு அரசியல்வாதி அல்ல. எங்கு வருமானம் கிடைக்குமோ, எங்கு ஆதாயம் கிடைக்குமோ அங்கு போகக்கூடியவர்.
அரவக்குறிச்சி தேர்தலுக்கு நாங்கள் போனபோது, செந்தில்பாலாஜிக்கு ஓட்டு கேட்கிறீர்கள். நாளைக்கு அவர் ஜெயிச்ச உடனே போனை ஆஃப் பண்ணிவிடுவார். போனில் கூட பேச முடியாது என அந்தப் பகுதி மக்கள் சொன்னார்கள். அதேபோல் அவர் ஜெயிச்ச பிறகு நானே போனில் பேச முடியவில்லை.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது அந்த துறையை பெரும் நஷ்டத்திற்கு கொண்டு சென்றார். தேவைக்கு மேல் ஆட்களை எடுத்து நஷ்டத்தில் கொண்டு சென்றார். செந்தில்பாலாஜி அரசியல்வாதி அல்ல. செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி. இவ்வாறு கூறினார்.