senthil balaji - dmk

Advertisment

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தது குறித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அதிமுக ரத்தம் ஓடும் தொண்டன் வேறு எந்த கட்சிக்கும் போகமாட்டார்கள். தினகரன் கட்சியில் இருந்து செந்தில் பாலாஜி விலகியது சரிதான். ஆனால் போய் சேர்ந்த இடம்தான் சரியில்லாத இடம். தினகரன் வேலைக்கு ஆகாது, மாயை அரசியல் எடுபடாது என்று விலகிவிட்டார். உண்மையான அதிமுக ரத்தம் ஓடுகிறது என்றால் எங்கள் பக்கம்தான் வருவார்கள்.

jayakumar

Advertisment

ஆனால் திமுகவில் சேருவது என்பது கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது. காணாமல் போய்விடுவார்கள். ஏற்கனவே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றவர்கள் one day hero -வாக இருப்பார்கள். all days hero-வாக இருக்க மாட்டார்கள். அதிமுகவைப் பொறுத்தவரையில் all days hero-வாக இருப்பார்கள். இவ்வாறு கூறினார்.