Advertisment

என்னுடைய தலைமையில் தான் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார் - கரூர் சின்னசாமி அதிரடி! 

karur chinnasamy

அ.மு.மு.க. கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் செந்தில்பாலாஜி தி.மு.க. செல்கிறார் என்கிற பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் செந்தில்பாலாஜி இணைப்பு நாளை சென்னை அறிவாலையத்தில் நடக்கிறது என்கிறார்கள் உள் வட்டத்தை அறிந்தவர்கள்.

Advertisment

செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் மா.செ. ஆன போது அதிருப்தியில் தி.மு.க.வில் இணைந்த கரூர் சின்னசாமி தான், தற்போது செந்தில்பாலாஜியை தன்னுடைய தலைமையில்தான் தி.மு.க.வில் இணைக்கிறேன் என்று இன்று கரூரில் பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறார்.

Advertisment

இன்று கரூரில் திறப்புவிழாவிற்கு வந்திருந்த சின்னசாமியிடம், செந்தில்பாலாஜி தி.மு.க.விற்கு வருவதால் நீங்கள் அ.தி.மு.க.விற்கு செல்வதாக தகவல் வெளிவருகிறதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அ.தி.மு.க.விற்கு செல்வது சுடுகாட்டிற்கு செல்வது சமம். எனக்கு செந்தில்பாலாஜிக்கு கருத்துவேறுபாடு கிடையாது. என்னுடைய தலைமையில் தான் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார் என்று அதிரடியாக கருத்து தெரிவித்துயிருக்கிறார்.

இதுவரை செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணையப்போகிறார் என்று வெறும் யூகங்களாக வெளிவந்த செய்திக்கு முதல்முறையாக தி.மு.க. சார்பில் சின்னசாமி கருத்து தெரிவித்து இருப்பது செந்தில்பாலாஜி தி.மு.க. இணைவது உறுதி செய்திருக்கிறார்.

நாளை சென்னையில் தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செந்தில்பாலாஜி தன் ஆதரவாளர்களுடன் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கரூர் சின்னசாமி அ.தி.மு.க.விற்கு அணி மாறும் எண்ணத்தை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மாற்றியிருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

join senthil balaji karur chinnasamy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe