செந்தில்பாலாஜி திமுகவில் இணைகிறாரா? ஆ.ராசா பதில்

aa.raja-senthi balaji

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்தார். டிடிவி அணி எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டத்தில் செந்தில் பாலாஜியும் ஒருவர். சமீபமாக டிடிவி அணியில் தொடர்பு இல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில் திமுகவில் செந்தில்பாலாஜி இணைகிறார் என்று தகவல்கள் தீயாக பரவியது. அமமுகவின் கொள்கைப் பரப்புச் செயலளார் தங்கத் தமிழ்ச்செல்வனோ, செந்தில் பாலாஜி திமுகவிற்கு செல்ல மாட்டார் என்று கூறியிருந்தார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் செந்தில்பாலாஜி செல்வது போல் இணையதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தப் புகைப்படங்கள் செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதை உறுதியாக்கியுள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இந்த நிலையில் செந்தில்பாலாஜி திமுகவில் இணைகிறாரா என்று கேள்விக்கு ஆ.ராசா, அதுபற்றி எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

aa.raja issue join senthil balaji
இதையும் படியுங்கள்
Subscribe