மே 19ஆம் தேதி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நான்கு தொகுதியிலும் எப்படியும் அதிமுக ஜெயிச்சே ஆகணும்னு நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிலும் திமுக சார்பில் அரவக்குறிச்சியில் போட்டியிலும் செந்தில் பாலாஜியை வீழ்த்தியே ஆகணும்ன்னு அவர் துடிக்கிறார்.
இதில் அதிமுகவோடு, தினகரனின் அமமுகவும் கைகோர்த்துள்ளது. இரண்டு பேருக்கும் டஃப்பான எதிரியாக செந்தில் பாலாஜி இருப்பதால், எப்படியாவது வேலூர் பாணி டெக்னிக்கைப் பயன்படுத்தி திமுக தரப்பை ரெய்டுக்கு ஆளாக்கி, பணத்தைப் பறிமுதல் செய்யணும்ங்கிறதுதான் அதிமுக ஸ்கெட்ச்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதிமுக தரப்பு ஓட்டுக்கு மூவாயிரம் ரூபாய் வீதம் கொடுத்துக்கொண்டிருக்க, அதைவிட ஆயிரம் ரூபாயைச் சேர்த்து செந்தில் பாலாஜி தரப்பு வாக்காளர்களை வசியம் பண்ணிக்கிட்டு இருக்கு. அதனால் செந்தில் பாலாஜி தரப்பை கண்காணிக்க அங்கே உளவுத்துறை பரபரப்பா இயங்குகிறது. அதிரடி ரெய்டு, பணக்கட்டுக்கள் பறிமுதல், தேர்தல் ரத்துக்குப் பரிந்துரைன்னு எப்ப வேண்ம்ன்னாலும் அங்கிருந்து செய்திகள் வந்தாலும் வரலாம் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.