Advertisment

கடும் அதிர்ச்சியையும், இன்ப அதிர்ச்சியையும் தந்த செந்தில் பாலாஜி!

mkstalin

Advertisment

டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்த செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த அவர் தனது ஆதரவாளர்களை படிப்படியாக திமுகவில் இணைத்து வருகிறார். கடந்த 9-2-2019 அன்று சேலத்தில், கரூர் மாவட்ட அ.ம.மு.க. கட்சியின் மாவட்டப் பொருளாளர் வி.ஜி.எஸ்.குமாரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மதுரையில் இன்று (15-2-2019) காலை, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பருவாச்சி எஸ்.பரணீதரன் மற்றும் அ.ம.மு.க. கட்சியின் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் ஈரோடு எம்.பிரபு ஆகியோரை திமுகவில் இணைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்ப அதிர்ச்சியையும், அமமுகவுக்கு கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், அ.ம.மு.க. கட்சியின் பவானி நகரத்தைச் சேர்ந்த நகரச் செயலாளர் வாணி கே.குமரன், - நகர இணைச் செயலாளர் எம்.பாக்கியராஜ் - நகர இளைஞர் அணிச் செயலாளர் எம்.அருண்குமார் - நகர எம்.ஜி.ஆர். பேரவைச் செயலாளர் பி.பாலமுருகன்; ஈரோடு மாநகர் மாவட்ட அணிகளைச் சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எம். சிவகுமார் - மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எஸ். செல்வக்குமார் - மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஆர்.கார்த்திக் - மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் ஜே.சந்தோஷ் டோமினிக் - மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் என்.ராமச்சந்திரன் - மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைத் தலைவர் என்.தனசேகர் - மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர் ஈ.அரவிந்முருகன் - மாவட்ட மாணவர் அணி தலைவர் எம்.டென்சன் - மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் எம்.முத்துகிருஷ்ணன் - மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர்கள் அருண்குமார், சசிகுமார் - மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் கே.ரமேஷ் - மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் கோட்டை கார்த்தி - மாவட்ட பேரவைத் தலைவர் அழகேசன் - மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் மில்டன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

Advertisment

இந்த நிகழ்வின்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., கரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

ammk senthil balaji
இதையும் படியுங்கள்
Subscribe